Soodhu kavvum 2: ஓடிடியில் வெளியாகும் சூது கவ்வும் 2 படம்.. பார்க்க ரெடியா மக்களே?

சென்னை: கடந்த 2013ம் ஆண்டில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது சூது கவ்வும் படம். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ஏறக்குறைய 11 ஆண்டுகள் கழித்து சூது கவ்வும் 2 படம் கடந்த டிசம்பர் மாதத்தில் ரிலீசானது. நடிகர் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த இரண்டாவது பாகத்தை எஸ்ஜே அர்ஜுன் இயக்கியிருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் நாளைய தினம் பொங்கலையொட்டி இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. நடிகர் மிர்ச்சி சிவா எப்போதுமே தன்னுடைய காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

mirchi siva soodhu kavvum 2 movie aha ott 2

சூது கவ்வும் படம்: நடிகர் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், கருணாகரன், அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சூது கவ்வும் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே கொடுத்தது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே கொடுத்த நிலையில் படத்திற்கான இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து காணப்பட்டது. இருந்தபோதிலும் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் தள்ளிப் போனது இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து சூது கவ்வும் 2 படம் ரிலீசாகியுள்ளது.

சூது கவ்வும் 2 படம்: கடந்த டிசம்பர் 13ம் தி ரிலீசான இந்தப் படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்திலேயே இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தை எஸ்ஜே அர்ஜுன் இயக்கியிருந்தார். படத்தில் சிவாவுடன் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்னங்களை பெற்ற நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பொங்கலையொட்டி நாளைய தினம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் அடையாளம்: பீட்சா படம் விஜய் சேதுபதிக்கு சிறப்பான என்ட்ரியாக அமைந்த நிலையில் சூது கவ்வும் படம்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. டார்க் ஹ்யூமர் கதைக்களத்தில் சிறப்பான திரைக்கதையுடன் வெளியான இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமில்லாமல் படத்தின் நடிகர்கள் அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களும் சிறப்பான கவனத்தை பெற்றுக் கொடுத்தது. மேலும் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் படம் மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஓடிடியில் வெளியாகும் சூது கவ்வும் 2: காட்சியமைப்புகள், திரைக்கதை மற்றும் நகைச்சுவை என முதல்பாகத்தில் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த பல அம்சங்கள் இரண்டாவது பாகத்தில் மிஸ்ஸிங்கான நிலையில் மிர்ச்சி சிவா மற்றும் கருணாகரன் இந்தப் படத்தில் ஸ்கோர் செய்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படம் நாளைய தினம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X