HIT 3 OTT : தியேட்டரில் சாதனை செய்த நானியின் ‘ஹிட் 3‘.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: ஹிட் கிரைம் திரில்லர் வரிசையில் வெளியான முதல் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, 'ஹிட் 3' திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இத்திரைப்படம் மே1ந் தேதி தியேட்டரில் வெளியானது. ஹிட் 3ல் நானியே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வசூலை அள்ளி இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நானி தெலுங்கு நடிகராக இருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான, ஈ, ஹாய் நானா, தசரா, ஷ்யாம் சின்கா ராய் போன்ற படங்களை தமிழ் ரசிகர்களும் கொண்டாடினார்கள். நானி நடிப்பில் கடந்த ஆண்டு 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அம்மா மீது அளவு கடந்த பாசத்தை வைத்து இருக்கும் மகனாக நல்ல ஒரு ரோலில் நடித்து இருந்தார் நானி. அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று, கணிசமான வசூலை அள்ளியது.

Nani hit 3 OTT 3

ஹிட் 3: அந்த திரைப்படத்தை தொடர்ந்து நானி, நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹிட் 3'. பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கிய, இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சூர்யா ஸ்ரீனிபாஸ், ரவி மரியா, ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடித்திருந்தார். கிரிமினல் ஜானரில் உருவாக இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி இருவரும் சேர்ந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.120 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் மே 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Read more about: nani ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X