Blind Spot Review: எதிர்பார்ப்பை மிஞ்சிய க்ரைம் திரில்லர்.. பிளைண்ட் ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
சென்னை: ராகேஷ் சர்மா எழுதி இயக்கிய திரைப்படம் 'பிளைண்ட் ஸ்பாட்'. இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவருடன் ராஷி சிங், அலி ரேசா, ரவி வர்மா, காயத்ரி பார்கவி, கிஷோர் குமார் பாலிமேரா, ஹரிகா பெடாடா, ஹர்ஷ் ரோஷன், மாஸ்டர் அபிஷிக்த், சித்தார்த் கொல்லபுடி ஆகியோர் நடித்து இருக்கின்றனர். ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
நடிகர் நவீன் சந்திரா அண்மைக்காலமாகவே க்ரைம் திரில்லர் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் 'பிளைண்ட் ஸ்பாட்' திரைப்படமும் ஒரு கிரைம் திரில்லர் கதை அம்சத்தை கொண்ட கதை தான். இதில், போலீஸ் அதிகாரியாக விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்துள்ளார். ராஷி சிங் திவ்யா என்கிற ரோலிலும், காயத்ரி பார்கவி பணிப்பெண்ணாக லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Blind Spot படத்தின் கதை: இந்தத் படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே, திவ்யாவிற்கும், ஜெயராமுக்கும் சண்டை நடக்கிறது. கணவன் மீது சந்தேகப்படும் மனைவி திவ்யா, இந்த ராத்திரியில நீ எங்க போற, வீட்ல பொண்டாட்டி இருக்கா என்கிற நினைப்பே இல்லையா... யார் கூட எந்த ஓட்டலில் ரூம் போட்டு இருக்கனு எனக்கு நன்றாக தெரியும் என்று தொடர்ந்து சண்டை மோசமான வார்த்தையால் பேசிக்கொண்டே இருக்கிறாள். அந்த நேரம், அந்த வீட்டில் வேலை செய்யும் லட்சுமி, அம்மா கோவப்படாதீங்க என்று சொல்ல, ஆத்திரப்படும் திவ்யா, லட்சுமியை பளார் என்று அடித்து விடுகிறாள். இதனால், கோவப்படும் ஜெயராம், திவ்யாவை அடித்து விட்டு, வெளியில் கிளம்பி விடுகிறான்.
இது தற்கொலை இல்லை: நீண்ட நேரமாகியும் திவ்யா தனது அறையில் இருந்த வெளியே வராததால், சந்தேகப்படும், பணிபெண் லட்சுமி, திவ்யாவின் அறையை திறந்து பார்த்த போது, அவள் தூக்கில் தொடங்கியபடி சடலமாக இருக்கிறாள். இதையடுத்து, லட்சுமி போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீஸ் அதிகாரியான நவீன் சந்திரா சம்பவ இடத்திற்கு வந்து விசாணை நடத்துகிறார். அவர் நடத்திய விசாரணையில் இது தற்கொலை இல்லை , கொலை என்பது தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து, நவீன் சந்திரா நடத்திய விசாரணையில், பணிப்பெண் லட்சுமிக்கும், அவளது மகளுக்கும் நடந்த சண்டையில் திவ்யா தலையில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். அதன் பின், இருவரும் சேர்த்து அதை தற்கொலையாக மாற்றி, பேனில் தொங்கவிட்டது தெரியவர, அம்மா, மகள் இருவரும் கைது செய்யப்படுகின்றனர்.
கொலையாளி யார்: அதன் பின் திவ்யாவின் உடலுக்கு நடக்கும் பிரேத பரிசோதனையில், திவ்யாவின் மரணம் தலையில் அடிபட்டதால், நடக்கவில்லை. அவளுக்கு விஷம் கொடுத்து திட்டமிட்டு கொலை செய்து இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, பணிப்பெண் லட்சுமிக்கும், அவளது மகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு இல்லை என்பதால், விசாரணையி கோணத்தை நவீன் சந்திரா மாற்றுகிறார். திவ்யாவை கொன்றது யார்... அவளுக்கு விஷம் கொடுத்தது யார்... திவ்யாவை கொலை செய்வதற்கான நோக்கம் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை. வழக்கம் போல இந்த படத்தில் நவீன் சந்திரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு காட்சியின் நகர்வும், படத்தை மேலும் விறுவிறுப்பாகுகிறது. இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. க்ரைம் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.


Click it and Unblock the Notifications











