‘குற்றம் புரிந்தவன்‘ வெப் தொடர் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

சென்னை: நடிகர் பசுபதி, வித்தார்த், லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வெப்தொடர் 'குற்றம் புரிந்தவன்'. இயக்குநர் செல்வமணி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், சோனிலிவ் ஓடிடி தளத்தில் 7 எபிசோட்டுகளாக வெளியாகி உள்ளது. ஒரு சிறுமியின் கொலையைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகளுடன் கதை சுவாரசியமாக செல்கிறது. 'குற்றம் புரிந்தவன்' வெப் தொடரின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பசுபதி வேலை செய்கிறார். இவருடைய மகள் பிரசவத்தின் போது இறந்து விட, மனைவி மற்றும் பேரனுடன் வாழ்ந்து வருகிறார். பேரனுக்கும் மூளையில் பிரச்சனை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்காக தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு. அதில், வரும் பென்ஷன் பணத்தை வைத்து பேரனுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என அந்த பணத்திற்காக காத்திருக்கிறார்.

kuttram purindhavan Pasupathi Vidharth
Photo Credit:

குற்றம் புரிந்தவன் வெப் தொடர்: இந்த நேரத்தில் நான் கிராமத்தில் கோவில் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவிற்காக அந்த பகுதியில் இருக்கும், அனைவரும் கோயிலுக்கு சென்று விடுகின்றனர். அப்போது, பசுபதியின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் 10 வயது சிறுமி மெர்சியை, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி, யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். மகளின் அவல நிலையை பார்த்து பதறிப்போன மெர்சியின் அப்பா சாலமன், பக்கத்து வீட்டில் இருக்கும் பசுபதியிடம், என் மகளை யாரோ ஒருவன் நாசம் செய்துவிட்டான், என் மகள் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள் அவளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மன்றாடுகிறார். ஆனால், பசுபதி நான் டாக்டர் இல்லை, மருத்துவமனைக்கு போகலாம் என்று கிளம்பும் நேரத்தில் மெர்சி இறந்துவிடுகிறாள்.

விறுவிறுப்பான தொடர்: மெர்சி இறந்ததை பார்த்து பதறிப்போன மெர்சியின் அப்பா துக்கம்தாளாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ஒரு பக்கம் மெர்சியின் சடலம், மறுபக்கம் சாலமனின் சடலம். இதனால் பதறிப்போனா பசுபதி, மெர்சியின் உடல் அருகே சென்ற போது தான் மெர்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொல்லப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த சந்தேகமும் நம் மீது திரும்பி விடும், போலீசார் விசாரணை நடத்துவார்கள். இதனால், பென்ஷன் பணம் வராது, பேரனுக்கு ஆப்ரேஷன் செய்ய முடியாது என யோசித்த பசுபதி, மெர்சியின் உடலை பிரிட்ஜில் மறைத்து வைக்கிறார்.

கதறும் தாய்: சம்பவ இடத்திற்கு வரும் போலீஸ் மெர்சியின் தாய் லட்சுமி பிரியாவை விசாரிக்கின்றனர். நான், கணவரிடம் மகளை விட்டு திருவிழாவிற்கு போய்விட்டேன். திரும்பி வந்து பார்த்தால், என் கணவர் உயிரிழந்துவிட்டார், மகளையும் காணவில்லை என்று சொல்ல, போலீசார் மெர்சியை பல இடத்தில் தேடுகின்றனர். அப்போது தான், இதே போல திருவிழா நேரத்தையும் பயன்படுத்தி மூன்று சிறுமிகள் ஏற்கனவே காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது. மெர்சியை தேடி போலீசார் அலைந்து கொண்டு இருக்க, மெர்சி குறித்த ரகசியத்தை வெளியில் சொல்லாமல் மனதுக்குள் புழுங்கி இருக்கும் பசுபதி, பென்ஷன் பணம் வந்ததும், இந்த விஷயத்தை போலீசில் சொல்லிவிடலாம் என முடிவு செய்கிறார்.

மெர்சி எங்கே: இந்த நேரத்தில் பேரனின் உடல்நிலை மோசமாகி விட, உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை வருகிறது. கையில் பணம் இல்லாததால், பசுபதி பல இடத்தில் பணத்தை தேடி அலைகிறார். அப்போது, மர்ம நபரிடம் இருந்து ஒரு போன் வருகிறது. அதில், மெர்சியின் உடல் உன்னிடம் தான் இருக்கிறது என எனக்கு தெரியும், நான் சொல்லும்படி செய்தால், ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன் என சொல்கிறான். பசுபதியும் வேறு வழியே இல்லாமல் அவன் சொல்வது போல மெர்சியின் உடலை யாருமே இல்லாத இடத்தில் வைத்து எரித்து விடுகிறார்.

kuttram purindhavan Pasupathi Vidharth
Photo Credit:

துரோகம் செய்துவிட்டேன்: அதன் பின் பேரன் ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை அந்த மர்ம நபர் கொடுத்து விட ஆபரேஷன் நல்லபடியாக நடக்கிறது. ஆனால், பசுபதியின் பேரன் கண் திறக்காமல் கோமா நிலைக்கு இருக்கிறார். இதற்கு காரணம் மெர்சிக்கு நாம் செய்த துரோகம் தான் என்ற மனவேதனையில் இருக்கும் பசுபதி, போலீசில் உண்மையை சொல்லிவிட வருகிறார். அப்போது, போலீஸ் ஜீப் ஓட்டும் விதார்த்திடம் அனைத்தையும் சொல்ல, விதார்த் இந்த விஷயத்தை, இப்போது இன்ஸ்பெக்டரிடம் சொன்னால். ஏற்கனவே இந்த கேஸை எப்படி முடிப்பது என தெரியாமல் இருக்கிறார்கள்.

யார் அந்த குற்றவாளி: மெர்சியை நான் கொல்லவில்லை, உடலை மட்டும் மறைத்து வைத்தேன் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். ஏற்கனவே இதேபோல மூன்று சிறுமிகள் பாலியல் ரீதியாக கடத்தி கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அந்த வழக்கையும் உங்கள் மீது தான் போட்டுவிடுவார்கள். வெளியில் கொலைகாரன் அடுத்து சிறுமியை கடத்தி கொலை செய்வான். அவனை சும்மாவிடக்கூடாது. மெர்சிக்கு வந்த நிலை, வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் நாம் அந்த குற்றவாளியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என பசுபதி மற்றும் வித்தார்த் இருவரும் குற்றவாளியை தேடி புறப்படுகிறார்கள்.

இதில் பலர் மேல் சந்தேகப்பார்வை திரும்பி கதை சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. மெர்சியை கொன்ற குற்றவாளி யார்? மெர்சியை பாலியல் ரீதியாக கற்பழித்து கொலை செய்ய என்ன காரணம்? என அடுத்தடுத்த மர்மம் முடிச்சுகளுடன் குற்றம் புரிந்தவன் வெப் தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. இந்த வார வீக் எண்டுக்கு ஒரு நல்ல க்ரைம் திரில்லாக இந்த வெப் தொடர் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X