Kalki 2898 AD: மாஸ் காட்டும் கல்கி 2898 ஏடி,, அட இந்தி ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போயிருக்கா?

சென்னை: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி 2898 ஏடி. நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவிஸ் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்து வருகிறது.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் ஜனவரியிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் மே மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்த ரிலீசிலும் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறது.

Actor Prabhas -Nag Ashwin s Kalki 2898 AD movie Hindi OTT rights sold for Huge amount

கல்கி 2898 ஏடி: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், ராணா, அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி. இந்தப் படத்தை மகாநடி என்ற நடிகை சாவித்ரியின் பயோபிக்கை இயக்கியிருந்த நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இணைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரபாஸ், கமல்ஹாசன் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்ளை கவர்ந்துள்ளன. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தள்ளிப்போகும் ரிலீஸ்: கடந்த ஜனவரியிலேயே இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட சூழலில் படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இருந்தபோதிலும் படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால் படம் ஜூன் 20ம் தேதிக்கு தள்ளிப்போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்கு புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த சூழலில் கடந்த ஆண்டில்தான் படத்தின் டைட்டில் கல்கி 2898 ஏடி என்று உறுதி செய்யப்பட்டது. படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தி ஓடிடி உரிமை விற்றுத் தீர்ந்தது: படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் கல்கி 2898 ஏடி படத்தின் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு விலைபோயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமத்தை வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 150 கோடி ரூபாய்களுக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

களைகட்டும் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம்: கல்கி 2898 ஏடி திரையரங்க ரிலீசுக்கு முன்னதாகவே ஓடிடி, டிஜிட்டல், தொலைக்காட்சி, வெளிநாட்டு உரிமைகளின்மூலமே 500 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் மகாபாரத காலத்தில் துவங்கி தொடர்ந்து 6000 ஆண்டுகளை கடந்த நிகழ்வுகளை கூறுவதாக முன்னதாக படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீசை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X