Actor Rajinikanth: தமிழ் புத்தாண்டிற்காக காத்திருக்கும் ரஜினிகாந்தின் லால் சலாம்.. ஓடிடி அப்டேட் இதோ
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அவரது மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இந்தப் படத்தில் மொய்தின் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது
இந்தப்படத்திற்கு முன்னதாக ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் டைட்டில் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் திலிப்குமார், அனிருத் மற்றும் பட குழுவினருடன் இணைந்து சன் பிக்சர்ஸ் கொண்டாடியது. விலையுயர்ந்த கார் உள்ளிட்டவற்றை கொடுத்து குதூகலித்தது. இந்நிலையில் இந்தப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

லால் சலாம் படம்: கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படம் கிரிக்கெட் மற்றும் திருவிழாவை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இந்தப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது .
லால் சலாம் ஓடிடி அப்டேட்: படம் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 15ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் மொய்தின் பாய் என்ற இந்த படத்தின் ரஜினியின் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாட்ஷா உள்ளிட்ட படங்களில் ரஜினியின் நடிப்பை இந்த மொய்தீன் பாய் கேரக்டர் ஒத்திருந்ததாக முன்னதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க மிஸ் செய்தவர்கள் தற்போது ஓடிடி மூலமும் சன் டிவியில் ஒளிபரப்புவதன் மூலமும் பார்த்துக் கொள்ள முடியும்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: மொத்தத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக இந்த படம் ரசிகர்களை கவர தயாராகி உள்ளது. தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் வரும் ஜூன் மாதம் முதல் இணையவுள்ளார் ரஜினிகாந்த். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் லோகேஷ் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











