ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜனவரி 25ந் தேதி தியேட்டரில் வெளியானத் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2011 ஆம் ஆண்டில் வெளியான ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இந்த படம் ஓரளவுக்கு இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய இவர் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார்.

சிங்கப்பூர் சலூன்: இத்திரைப்படத்தில், ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், லால், கிஷென் தாஸ், ஆன்னி ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் லீட்ரோலில் நடித்துள்ளனர்.
சிங்கப்பூர் சலூன் கதை: தென்காசியில் சிங்கப்பூர் சலூன் என்ற கடை வைத்திருக்கும் சாச்சாவைப் பார்த்து தானும் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் ஆர்ஜே பாலாஜி. படித்து முடித்த பிறகு தன் லட்சியத்தை அடைய மாமனாரான சத்யராஜிடம் பணத்தைப் பெற்றும் கடனை வாங்கியும் சென்னையில் சலூன் கடைத் திறக்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பத்தால் கடையைத் திறக்க முடியாமல் போகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முடிவெடுக்கும் பாலாஜி, பிறகு அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி: பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் (Tentkotta) ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் அதாவது 23ம் தேதி வெள்ளிக்கிழமை Tentkottaல் கண்டு மகிழலாம். இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











