RJ Balaji: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சொர்க்கவாசல்.. அட இத்தனை மொழிகளில் வெளியாகுதா?

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் நடிக்கும் சூர்யா 45 படத்தை இயக்க உள்ளார், இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொள்ளாச்சியில் 45 நாட்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்துள்ள சொர்க்கவாசல் படம் ரிலீசாகி மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே, இந்த படத்தின் ஓடிடி அப்டேட் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

rj balaji sorgavaasal movie netflix ott

நடிகர் ஆர்ஜே பாலாஜி: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது சொர்க்கவாசல் படம். சிறைச்சாலை மற்றும் கைதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவர்ந்து அதன் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டில் மத்திய சிறையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சித்தார்த்.

சூர்யா 45 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 45 படத்தின் ஷூட்டிங்கை துவங்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி, சூர்யா மற்றும் ஆர்ஜே பாலாஜி காம்பினேஷனில் உருவாக உள்ள இந்த படத்தில் திரிஷா லீட் கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் லப்பர் பந்து நடிகை சுவாசிகா, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்களும் படத்தின் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் பொள்ளாச்சியில் துவங்கியுள்ளது. தொடர்ந்து பொள்ளாச்சியில் 45 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் படத்தின் ஓடிடி: சூர்யா 45 படத்தின் கதைக்களம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட மாசாணி அம்மன் படத்தின் கதையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விரைவில் படக்குழுவினர் அப்டேட் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்றைய தினம் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சொர்க்கவாசல் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான விமர்சனங்கள்: படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சொர்க்கவாசல் படம் ஒரு முழுமையான திரையனுபவத்தை கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல நான்-லீனியர் முறையில் இந்தப் படத்தை கொண்டு சென்ற விதத்திற்காக இயக்குநரும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறிப்பாக இரண்டாவது பாகம் மிகவும் பலமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் படம் திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X