ஒரே நாளில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் 2 படங்கள்!
சென்னை: பிரபல நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சமுத்திரக்கனி.
கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சமுத்திரக்கனி பல்வேறு டிவி சீரியல்களில் பணியாற்றியுள்ளார்.

நடிகராகவும் வலம் வரும் சமுத்திரக்கனி
உன்னை சரணடைந்ததேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சமுத்திரக்கனி, நிறைஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சமுத்திரக்கனி.

சப்போர்ட்டிங் ரோல்
சுப்பிரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்பறவை, வேலையில்லா பட்டதாரி, மாசு என்கிற மாசிலாமணி, ஸ்டாபெர்ரி, பசங்க 2, ரஜினி முருகன், விசாரணை, காதலும் கடந்து போகும், தொண்டன், காலா, காப்பான், நாடோடிகள் 2, தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விநோதய சித்தம்
விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் சமுத்திரக்கனி. இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் 'விநோதய சித்தம்'. இப்படத்தில் அவரே லீடிங் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அக். 13ல் ரிலீஸ்
மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு படங்கள்
அதே நாளில் சமுத்திரகனி நடித்துள்ள 'உடன்பிறப்பே' படமும் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதன்மூலம் சமுத்திரகனி நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











