இரவில் நடுங்கும் மனைவி.. டார்ச்சர் கொடுக்கும் கணவன்.. லப்பர் பந்து பட நடிகையின் வித்தியாசமான படம்!
சென்னை: இயக்குநர் கமல் இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் vivekanandan viralaanu. இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா விஜய், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மலையாள திரைப்படம் என்றாலே வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகத்தான் இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான திரைப்படம் தான் இப்படம். அரசு அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விவேகானந்தன், இரவு நேரத்தில் படுக்கை அறையில் மிகவும் கொடூரமானவராக நடத்து கொள்கிறார். மனைவி மட்டும் இல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் லிவ்விங்டூ ரிலேஷன் ஷிப்பிலும் இருக்கிறான். அந்த பெண்ணையும் இரவு நேரத்தில் கொடுமைப்படுத்துகிறான்..இதில் இருந்து அந்த பெண்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் vivekanandan viralaanu படத்தின் கதை.

vivekanandan viralaanu: படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே ஒரு அழகான மலை கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து பெண் அலறி கத்தும் சத்தத்தோடுதான் கதை ஆரம்பிக்கிறது. இதையடுத்து, வீட்டிற்குள் கணவர் விவேகானந்தா தனது மனைவியிடம் மிகவும் கொடூரமாக தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். இதனால், மனைவி சித்தாரா வலி தாங்கமுடியாமல் கத்துகிறார். அப்போது கணவர் விவேகானந்தன் சாரி, சித்தாரா இதோட உன்னை அடுத்த வாரம் தான் பார்ப்பேன், இதனாலத்தான் இப்படி நடந்து கொண்டேன் என்று சொல்லி சமாளிக்க, சித்தாராவும் கணவன் என்பதால் பொருத்துக்கொள்கிறாள்.
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு: அதாவது விவேகானந்தனுக்கு சிட்டியில் வேலை செய்கிறார் என்பதால், வார இறுதி நாட்களில் மனைவியுடன் இருந்துவிட்டு, திங்கட்கிழமையானால் வேலைக்கு கிளம்பிவிடுவார். இதனால், சிட்டியிலும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குவருகிறான். அந்த வீட்டில் இருக்கும் டயானா என்ற பெண்ணோடு தான், விவேகானந்தன் லிவ்விங்கில் வாழ்ந்து வருகிறார். விவேகானந்தன் சிட்டிக்கு மாறுதலாகி வந்த போது, டயானா வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளான். அப்போது, டயானாவின் அழகில் மயங்கி அவரின் உடம்பு முடியாத அம்மாவை கவனித்துக்கொள்வது போல நடித்து,டயானாவை தனது வலையில் விழவைத்துள்ளான். பல நாட்களான டயானா தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லியும் ஏமாற்றி வருகிறான் விவேகானந்தன். இதனால், டயானாவின் அம்மா, இவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பு இவன் சரியானவன் இல்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
இரவில் மிருகம்: ஊரில் இரண்டு நாள் மனைவியுடன் இருந்துவிட்டு வந்த விவேகானந்தன், ஆண்மை அதிகரிக்கும் மூலிகையை சரக்கில் கலந்து குடித்துவிட்டு டயானாவிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறான். இதனால், இரவு ஆனாலே டயானாவிற்கு பதற்றம் பயம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. வேண்டாம் என்று சொன்னாலும், அந்த நேரத்தில் மிருகமாக மாறி அடித்து, துன்புறுத்தி காரியத்தை சாதித்து கொள்கிறான். இந்த விஷயத்தை டயானா தனது தோழியிடம் சொல்லி அழுகிறான். பகலில் அன்பாக இருக்காரு ஆனால்,இரவில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் விடாமல் கொடுமைப்படுத்துகிறார் என்று டயானா புலம்புகிறாள்.

கதறி அழும் டயானா: இதையடுத்து, மீண்டும் வார இறுதி நாட்கள் வர விவேகானந்தன் மீண்டும் ஊருக்கு சென்றுவிடுகிறான். ஊருக்கு சென்றதுமே, அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டுவிட்டு மனைவியை படுக்கைக்கு அழைக்க, சித்தாரா இன்னைக்கு வேண்டாம் உடம்பு சரியில்லை என்று சொல்ல விவேகானந்தன் டென்ஷன் ஆகிறான் இந்த நேரத்தில் டயானாவிடம் இருந்த அம்மா இறந்துவிட்டதாக போன் வர, என்னால ஊருக்கு வரமுடியாது நான் வேண்டுமானால் பணம் அனுப்புகிறேன் என்று சொல்ல டயானா அழுதுகொண்டே போனை வைத்துவிடுகிறாள். அப்போது தான், விவேகானந்தன் உடல்தேவைக்காக மட்டுமே நம்மிடம் பழகுகிறான் என்று தெரிந்து கதறி அழுகிறாள்.
இரவில் டார்ச்சர்: இதையடுத்து, விவேகானந்தன் சிட்டிக்கு வந்ததும், அவனிடம் பொய் சொல்லிவிட்டு டயானா தனது யூடியூப் தோழியை அழைத்துக்கொண்டு,சித்தாராவை சந்தித்து, விவேகானந்தன் சிட்டியில் தனி வீடு எடுத்து தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் அது மட்டுமில்லாமல் தினமும் நைட் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கொடுமைப்படுத்துகிறார். என் உடல் முழுவதும் காயம் காயமாக இருக்கு, எனக்கு நடப்பது போல நிச்சயம் உங்களுக்கும் காயம் இருக்கும். நாம இரண்டு பேரும் சேர்ந்து அவனின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று டயானா பேச, சித்தாராவும் இத்தனை ஆண்டு தன்னை ஏமாற்றிய விவேகானந்தனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று இருவரும் சேர்ந்து ஒரு பிளான் போடுகின்றனர்.
சும்மா விடக்கூடாது: விவேகானந்தன் வந்ததும், சித்தாரா, டயானா மற்றும் யூடியூப் தோழி என மூன்று பேரும் வீட்டிற்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய, அந்த நேரம் பார்த்து முகத்தில் ஸ்பிரே அடித்து அவனை மயக்கமடைய வைத்து அவனை, சேரில் கட்டிவைக்கின்றனர். இதையடுத்து, தோழியின் யூடியூப் சேனலில் பேசும் சித்தாரா, கணவன் என்பதற்காக ஒரு பெண்ணை எதுவேண்டுமானாலும் செய்யலாமா, கணவராகவே இருந்தாலும் அவள் அனுமதி இல்லாமல் அவன் தொடக்கூடாது, ஆனால், இந்த ஆள் என்னை மட்டுமில்லாமல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றி வாழ்ந்த அந்த பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்து இருக்கிறான்.
காமக்கொடூரன்: இவனால், உடம்பு முழுக்க எங்க ரெண்டு பேருக்கும் காயம், இப்படிப்பட்ட காம அரக்கனை உயிரோட விடலாமா என்று யூடியூப் நேரலையில் சித்தாரா பேச இந்த விவகாரம் பெரிய அளவில் ரீச்சாகி வீட்டின் முன் அனைத்து மீடியாக்களும் கூட, அந்த இடத்தில் போலீஸ் குவிக்கப்படுகிறது. அந்த பெண்கள் அவனை கொன்றுவிடப்போகிறார்கள் என்ற பயத்தில் போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர முயற்சி செய்கின்றனர். அப்போது மீண்டும் லைவில் வந்த சித்தாரா மற்றும் டயானா, நாங்க இவனை கொல்லமாட்டோம். இதுபோன்ற காமக்கொடூரர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், இதுபோன்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு பெண்கள் வாழ்க்கை நாசமாகிவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் வெளியில் வரவேண்டும் என்பதற்காகவே இந்த விஷயத்தை வெளியில் கொண்டுவந்தோம். இதுபோல மற்ற பெண்களும் துணிந்து வெளியில் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வெளியில் வருகின்றனர். வித்தியாசமான இத்திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











