ஓடிடியில் வெளியான சிம்பு படம்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வெந்து தணிந்தது காடு!

சென்னை : நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது வெந்து தணிந்தது காடு.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சாதாரண கிராமத்து இளைஞனின் பயணத்தை சிறப்பாக கொண்டு சென்றது.

மாநாடு படத்தை தொடர்ந்து இந்தப் படமும் சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிம்புவின் மாநாடு படம்

சிம்புவின் மாநாடு படம்

நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவரது மாநாடு படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இதையடுத்து இந்தப் படம் 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. இதையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடத்த வெந்து தணிந்தது காடு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படமும் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களையும் அதையொட்டி நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

அடுத்தப்படமும் ரெடி

அடுத்தப்படமும் ரெடி

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிம்பு இதன்மூலம் தன்னுடைய ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளார். விமர்சகர்களிடையேயும் தனிக்கவனம் பெற்றுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் பத்து தல படமும் இறுதிக்கட்ட சூட்டிங்கை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் 14ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதை

கேங்ஸ்டர் கதை

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியிருந்தார் சித்தி இத்னானி. மேலும் ராதிகா சரத்குமாரும் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கிராமத்து இளைஞர் எப்படி கேங்ஸ்டராக உருமாறியுள்ளார் என்பதை கதைக்களமாக கௌதம் மேனன் கொண்டிருந்தார்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், படத்தின் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக எப்ப வரப்போற போன்ற பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களின் விருப்ப லிஸ்டில் இணைந்துள்ளன. தொடர்ந்து சிம்புவின் அடுததப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ட்ரெண்டிங்கில் வெந்து தணிந்தது காடு

ட்ரெண்டிங்கில் வெந்து தணிந்தது காடு

இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றைய தினம் இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தை ட்ரெண்ட்டிங்கில் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X