ஓடிடியில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர்.
இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக டாக்டர் படம் வரும் நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் பல ஹிட் படங்களை தொடர்ந்து தந்து வருகிறார். இவரது எதிர்நீச்சல், ரஜினி முருகன், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ள நிலையில் தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கப்போடு போட்டுவரும் படம் டாக்டர்.

நெல்சன் இயக்கம்
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இவர் கோலமாவு கோகிலா படம் மூலம் கவனம் பெற்றவர். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தையும் இயக்கி வருகிறார். இதையடுத்து இவரது டாக்டர் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

வெற்றிநடை போடும் டாக்டர்
இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் 3 வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது டாக்டர் படம். படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவையும் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு படத்தின் செல்லம்மா பாடலின் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கிலும் வெற்றி
படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கில் வருண் டாக்டர் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடியிலும் ரிலீஸ்
முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் 3 வாரங்களை கடந்துள்ள நிலையில் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Recommended Video

நெட்பிளிக்சில் ரிலீஸ்
வரும் நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்சில் டாக்டர் படம் வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடத்து திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் படத்தை வீட்டிலிருந்தபடியே பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வசூல்மழையில் டாக்டர் படம்
ஏற்கனவே படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகமான வசூலை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது படத்திற்கு மேலும் வசூலை கொடுக்கும். இதன்மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











