Garudan on OTT: ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. சூரியை ருத்ரதாண்டவம் ஆடவைத்த கருடன்.. ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை: காமெடி நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உருவாகி இருப்பவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனால் விடுதலைப் பாகம் 2 எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் சூரியையும் வெற்றிமாறியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ள நிலையில் கடந்த மே 31ஆம் தேதி கருடன் படம் வெளியானது.

இந்நிலையில் சூரியின் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் திரையரங்குகளில் ஒரு சில பகுதிகளில் ஓடிக் கொண்டுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் படத்தினை படத்தின் இயக்குநர் கர்ணின் கதை என குறிப்பிட்டு வந்தார். இந்த இயக்குனர் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரி என மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சூரி தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும் சசிகுமாருக்கும் உன்னி முகுந்தனுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் கதை சொல்லியாக வரும் சமுத்திரக்கனியும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டுள்ளார். படத்தின் மற்றொரு பலம் என்றால் அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறிப்பிடலாம். குறிப்பாக இடைவேளை காட்சியில் ருத்ரதாண்டவம் ஆடும் சூரிக்கு அசத்தலான பின்னணி இசையை அமைத்து ரசிகர்களுக்கு புல்லரிக்க வைத்துள்ளார்.
படத்தின் கதை: இரண்டு நண்பர்களாக சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நடித்துள்ளனர். இதில் உன்னி முகுந்தனின் விஸ்வாசியாக சூரி உள்ளார். கோயில் விஷயத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட உன்னி முகுந்தன் சசிக்குமாரை கொன்று விடுகிறார். அதன் பின்னர் சசிகுமாரின் குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சி செய்கின்றார். அப்படியான நிலையில் சூரி சசிகுமாரின் குடும்பத்தினை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகின்றார். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.

கருடன் வசூல்: படம் வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் வசூல் வேட்டையும் நடத்தியது. நடிஅக்ர் சூரியும் ரசிகர்களைச் சந்திக்க வருகின்றேன் எனக் கூறி பல்வேறு காட்சிகளை ஹவுஸ்புல் காட்சிகளாக மாற்றிவிட்டார். இதனால் படத்திற்கான வசூல் என்பது படத்தின் பட்ஜெட்டை விடவும் பலமடங்கு உயர்ந்தது. இந்நிலையில் படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளது என ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் படம் இன்று அதாவது ஜூலை மாதம் 3ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அமேசான் பிரைம் கருடன் படத்தினை படத்தின் பட்ஜெட்டுக்கு இணையான அளவிற்கு விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படத்தின் வசூலும் பலமடங்காக இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

சூரியின் அடுத்தடுத்த படங்கள்: சூரியின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் வரிசையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படமும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத் ராஜன் இயக்கத்தில் கொட்டுக்காளி படமும் வெளியாக உள்ளதால் தமிழ் சினிமாவில் சூரி ஒரு உச்ச நட்சத்திரமாகவே வளர்ந்து வருகிறார். கருடன் படத்தின் போதே சூரியின் பெயர் திரையில் வந்த போதும் சூரி திரையில் தோன்றிய போதும் அவருக்கான மாஸ் சீன்கள் வந்த போதும் ரசிகர்கள் கைத்தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்ததை திரையரங்குகளில் காண முடிந்தது. தமிழ் சினிமாவில் ஒரு அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவே சூரி நிலை நிறுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











