Garudan: ஜூலை 3ம் தேதி ஓடிடியில் வெளியாகும் கருடன்.. மிரட்டல் அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களம் இறங்கி வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலைப் படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது.
இந்த படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் சூரி நடித்திருந்த நிலையில் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் சூரி: நடிகர் சூரி தொடர்ந்து ஹீரோவாகவே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் சூரி -வெற்றிமாறன் காம்பினேஷனில் வெளியான விடுதலை படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்தது. இந்த படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. இந்த கேரக்டர் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறி படத்தின் வெற்றிக்கு துணை போனது. படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த போதிலும் சூரியின் நடிப்பே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகம் தற்போது விடுதலை 2வாக உருவாகி வருகிறது.
கருடன் படம்: இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து இந்த ஆண்டுக்குள் இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் சூரி நாயகனாக நடித்துள்ளார். ஆனால் 2வது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மிக முக்கியமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் கருடன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் சூரி அதிரடி காட்டியிருந்தார். படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
கருடன் ஓடிடி ரிலீஸ்: படத்தில் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காட்சி அமைப்புகள் காணப்பட்டன. விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள கருடன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இந்தப் படத்தில் மாஸ் காட்டியுள்ளார் சூரி. இந்நிலையில் அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதனிடையே, கருடன் படம் வரும் 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிம்ப்ளி சவுத் ஓடிடி நிறுவனம்: இதனிடையே இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் இந்த படத்தை சிம்ப்ளி சவுத் ஓடிடி நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படததின் வீடியோவுடன் சிம்ப்ளி சவுத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள கருடன் படம் ஓடிடியிலும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











