The Road OTT Release Date: ஓடிடியில் தி ரோடு படம்.. எப்போது ரிலீஸ்?

சென்னை: த்ரிஷா நடிப்பில் க்ரைம் திரில்லர் பாணியில் உருவான தி ரோட் திரைப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

த்ரிஷா, டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி , செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அருண் வசீகரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

Actor Trishas the road ott movie release date announced

தி ரோட்: கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியானத் திரைப்படம் தி ரோட். மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கதை: அழகான குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வரும் த்ரிஷா, சாலை விபத்தில் தன் கணவர், குழந்தைகளை இழக்கிறார். ஆனால் தன் கணவர், குழந்தைகளை த்ரிஷா இழந்த NH 44 சாலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர் சாலை விபத்துகள் நடப்பது த்ரிஷாவுக்கு தெரியவருகிறது. இதனால், த்ரிஷாவுக்கு சந்தேகம் வர அந்த இடத்திற்கு செல்கிறார். பல பேர் அதே இடத்தில் சாலை விபத்தில் இறப்பதற்கு பின்னணியில் ஒரு பெரிய திருட்டு கும்பல் மற்றும் கிரைம் இருப்பது தெரிய வர, அதை தானே கண்டுபிடிக்க பல முயற்சிகளை செய்கிறார். அதில் வென்றாரா? தோற்றாரா என்பது தான் படத்தின் கதை.

மிரட்டலான நடிப்பு: நடிகை த்ரிஷாவின் நடிப்பு தான் படத்தின் ஹைலைட், அவர் மொத்த படத்தையும் தாங்கி நடித்து மிரட்டுகிறார். அவரது அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும் காட்சிகளும், கணவர் மற்றும் மகனை இழந்து விட்டு தவிக்கும் தவிப்பு என நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என பலர் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டினார்கள்.

ஓடிடியில்: கடந்த மாதம் அக்டோபர் 6ந் தேதி வெளியான இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவான தி ரோடு திரைப்படம் வரும் நவம்பர் 10 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது. இதை தயாரிப்பாளர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X