Samantha: வருண் தவானுடன் நெருக்கம் காட்டும் சமந்தா.. இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வந்த நிலையில் அடுத்ததாக மலையாளத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். முன்னதாக ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக அவர்கள் இயக்கத்திலேயே இணைந்துள்ளார்.

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது வருண் தவான் மற்றும் சமந்தா ஜோடி மேடைகளில் ஒன்றாக தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

varun dhawan samantha citadel honey bunny

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்/ இடையில் நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பு, அரியவகை உடல் நல பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய சமந்தா, ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார். முன்னதாகவே அவர் சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் தொடரில் நடித்து முடித்திருந்த நிலையில் இதன் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ளனர். முன்னதாக சமந்தா லீட் கேரக்டரில் நடித்திருந்த பேமிலி மேன் 2 தொடரையும் இவர்கள் இயக்கியிருந்த நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஷனில் மிரட்டும் சமந்தா: கடந்த 2022ம் ஆண்டில் ரிச்சர்ட் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் இணைய தொடரின் அடுத்த பாகமாக தற்போது சிட்டாடல் ஹனி பன்னி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 7ம் தேதி இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இதன் ட்ரெயிலரில் அதிரடி ஆக்ஷனில் சமந்தா மிரட்டியுள்ளார். ரகசிய ஏஜெண்டாக தான் இருந்ததாக தன்னுடைய மகளிடம் சமந்தா கூறுவதாக இந்த ட்ரெயிலரில் காட்சிகள் அமைந்திருந்தன. தன்னுடைய குழந்தையை காக்கும் தாயாக துப்பாக்கி மற்றும் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளார் சமந்தா.

சமந்தா -வருண் தவான் கெமிஸ்ட்ரி: ஒரு கட்டத்தில் வருண் தவானை அவர் காதலிப்பதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன. இந்த டிரெயிலரை வைத்து இந்த தொடரின் கதைக்களத்தை கணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த தொடரில் கேகே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த தொடரின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சமந்தா மற்றும் வருண் தவான் ஜோடி இணைந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நெருக்கம் காட்டியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

நெருக்கமான புகைப்படம்: சிட்டாடல் ஹனி பன்னி தொடர் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வருண் தவான் மற்றும் சமந்தா இருவரும் நெருக்கமாக அணைத்தபடி உள்ள இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து வெளியான இரண்டு மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த புகைப்படம் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு இந்த ஜோடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதையே இது காட்டுகிறது. இந்த தொடருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தொடர் வெளியான பின்பு, இவர்களின் மவுசு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X