Maharaja movie: நெட்ஃபிளிக்சில் முதலிடத்தில் மகாராஜா படம்.. ஓடிடியிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 25 நாட்களை கடந்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து கடந்த 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியிலும் படம் வெளியாகியுள்ளது.
மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் அப்பா -மகள் பாசத்தை சொல்லும் படமாக வெளியாகியுள்ள மகாராஜா படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள், தற்போது ஓடிடியில் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு மட்டுமில்லாமல் படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதனுக்கும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து வில்லன், ஹீரோ, கேரக்டர் ரோல்கள் என நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். சில ஆண்டு காலங்களிலேயே இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார். கடந்த மாதத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா, நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நட்ராஜ், அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து மிகச் சிறப்பான படத்தை கொடுத்துள்ளனர்.
ரசிகர்கள் பாராட்டு: இந்த படத்தின் கதைக்களம் யூகிக்க முடியாத அளவில் இருந்ததாக ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்ததை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் தொடர்ந்து 25 நாட்களை கடந்து இந்த படம் ஓடி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் படம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோ என்ற இமேஜிற்குள் சிக்கிக் கொள்ளாமல் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், கமல்ஹாசன், ஷாருக்கான் என பெரிய ஹீரோக்களின் படங்களில் இவர் வில்லனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார்.
மகாராஜா படம்: வில்லன் கேரக்டர்களால் தன்னுடைய ஹீரோ இமேஜ் பாதிக்கப்படுவதாக நெருங்கிய வட்டங்கள் கூறியதாகவும் அதனால் தான் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதை பார்க்க முடிந்தது. ஆயினும் இவர் மீண்டும் வில்லன் கேரக்டர்களில் நடிப்பார் என்று தெரிகிறது. குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிதிலன் சாமிநாதன், ஆறு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மகாராஜா படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். மிகப்பெரிய அளவில் இந்த படம் மூலம் அவர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நம்பர் ஒன்: அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை இந்த படத்தில் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக கமெண்ட்ஸ்கள் எழுந்துள்ளன. கடந்த 12ம் தேதி இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நெட்ஃபிளிக்சில் தொடர்ந்து முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் பட குழுவினர் மிகப்பெரிய உற்சாகத்தில் காணப்படுகின்றனர். திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்தது போலவே மகாராஜா படம் தற்போது ஓடிடியிலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே தங்களது ஆதரவை கொடுக்க தவற மாட்டார்கள் என்பதை மகாராஜா தற்போது நிரூபித்துள்ளது.


Click it and Unblock the Notifications











