ஓடிடியிலும் அதிகமாக கல்லா கட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா.. நெட்ஃபிளிக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் மிகப் பெரிய கவனத்தை பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக துவங்கிய இவரது பயணம், அடுத்தடுத்து வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு பரிணாமங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தின் மூலம் தன்னுடைய 50வது படத்தை வெற்றிகரமாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளார் விஜய் சேதுபதி.

மகாராஜா படம் திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் படம் வெளியான நிலையில் பத்து மடங்கு லாபத்தை படம் பெற்றுக் கொடுத்துவதாக கூறப்பட்டுள்ளது. வெறும் 17 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது 150 கோடி ரூபாயை வசூலித்து கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மகாராஜா படத்தை ஓடிடியில் இரண்டு கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

vijay sethupathi maharaja movie ott release

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் பயணம் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக தொடங்கியது. முன்னதாக சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் வில்லன் கேரக்டர்களிலும் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று மிகப்பெரிய அளவில் கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்த நிலை பீட்சா படம் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. இந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இயல்பான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் விஜய் சேதுபதி, குறுகிய காலத்திலேயே 50 படங்களை நிறைவு செய்துள்ளார்.

மகாராஜா படம்: அவரது 50வது படமாக மகாராஜா படம் கடந்த ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் ட்ரெயிலர்கள் முன்னதாக மிகப்பெரிய கவனத்தை பெற்ற நிலையில் படம் அதை அப்படியே ரசிகர்களுக்கு கடத்தியது. இந்த படத்தில் லட்சுமி என்ற கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருந்த படக்குழுவினர், கடைசியில் அது ஒரு குப்பைத்தொட்டி என்பதாக கொடுத்திருந்த நிலையில் இது மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இந்த படம் தொடர்ந்து ஜூலை மாதத்தில் netflix ஒடிடியிலும் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

மகாராஜா ஓடிடி ரிலீஸ்: திரையரங்கில் சென்று பார்க்க முடியாத வெளிநாட்டு ரசிகர்களும் இந்த படத்தை ஓடிடியில் கண்டு களித்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது 2 கோடி பார்வைகளை கடந்து மாஸ் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படம் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்து 150 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டி உள்ளதாகவும் நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை வெறும் 17 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்த நிலையில் தற்போது 10 மடங்கு லாபத்தை படம் பெற்றுள்ளது. முன்னதாக இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 110 கோடிகளை வசூலித்திருந்தது.

ஓடிடியில் 10 மடங்கு லாபம்: இதையடுத்து விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி கிளப் படமாக மகாராஜா மாஸ் காட்டியது. ஒவ்வொரு நடிகருக்கும் 25வது, ஐம்பதாவது நூறாவது படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு 50வது படமான மகாராஜா மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. இந்த படத்தை முன்னதாக குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியிருந்த சுவாமிநாதன் கொடுத்திருந்தார். படத்தின் திரைக்கதை சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் திரையரங்குகளிலும் தற்போது ஓடிடியிலும் பிரம்மாண்டமான வரவேற்பை மகாராஜா படம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X