அக்டோபர் 10ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறதா விஜய்யின் கோட் படம்?.. யாருக்கு எதிராக இந்த முடிவு?

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.. நடிகர் விஜய்யின் 68வது படமாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த கோட் படம் பல சுவாரஸ்யங்களுடன் ரிலீசானது.

கோட் படம் தமிழகத்தில் 200 கோடி ரூபாய் வசூலையும் சர்வதேச அளவில் 400க்கும் மேற்பட்ட வசூலையும் குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

vijay goat movie netflix

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா என முன்னணி ஹீரோக்கள் இணைந்திருந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் ரசிகர்கள் கொண்டாட ஏராளமான விஷயங்களை இணைத்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. இளைய தளபதி விஜய்யின் லுக் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்துடன் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தது. மேலும் படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களின் கேமியோ கேரக்டர்களும் படத்திற்கு வெயிட்டை ஏற்படுத்தியிருந்தது.

கோட் படம்: இதனிடையே விஜய்யின் இரட்டை கதாபாத்திரங்களும் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்திருந்தது. இதுபோன்ற ஏராளமான விஷயங்கள் படத்தில் இணைக்கப்பட்ட நிலையிலும் படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவரது படங்கள் இந்த மாநிலங்களில் சிறப்பாகவே கல்லா கட்டும் .ஆனால் கோட் படம் அந்த வகையில் தவறியுள்ளது. படம் சர்வதேச அளவில் 420 கோடி ரூபாய்களை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 200 கோடி ரூபாய்களை கோட் படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்: சமூக வலைதளங்களில் மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கூறுவது போல இது பிளாப் படம் அல்ல என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படம் 400 கோடிகளை தாண்டி வசூல் சாதனை செய்துள்ள நிலையில், விஜய்யின் முந்தைய படமான லியோ படத்தைக் காட்டிலும் இந்த படத்தின் வசூல் எண்ணிக்கை குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, படம் அக்டோபர் 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஜினிக்கு எதிராக முடிவு?: அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்றைய தினம் விஜய்யின் கோட் படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்ட நிலையில், அவர்களது இந்த சண்டை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வேட்டையன் பட ரிலீசின்போது கோட் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X