Leo OTT release: போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று லியோ டே.. ரசிகர்கள் குஷி!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகிறது. மதியம் 12.30 மணிக்கு இந்திய நேரப்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ ஸ்ட்ரீம் ஆகும் என அறிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னதாக லியோ எனும் டைட்டிலில் அனிமேஷன் ஓணான் படம் வெளியான நிலையில், அதை பார்த்து விஜய் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இந்நிலையில், நெட்பிளிக்ஸில் இன்று தான் லியோ டே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லியோ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 600 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ஓடிடியில் இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ஜவான் சாதனையை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஓடிடியில் லியோ: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் லியோ படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னதாகவே அந்த படத்தை புக் செய்து விட்டது. 4 வாரத்தில் லியோவை ஸ்ட்ரீம் செய்ய பெரிய தொகை கொடுத்த நிலையில் தான் இந்தியில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் லியோ படத்தை திரையிட முடியாமல் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ஷைன் ஆகாமல் போனது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 12.30 மணி முதல் லியோவின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.
லோகேஷ் சம்பவம்: நடிகர் விஜய்யை இதற்கு முன் பார்க்காத அளவுக்கு ஒரு சிறந்த நடிகராகவும் ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கும் வகையில் நடிக்க வைத்து விஜய் ரசிகர்களுக்கு தியேட்டரில் பெரிய சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜின் லியோ படத்தை ரசிகர்கள் ஒவ்வொருவரும் இனிமேல் எத்தனை முறை டிவியில் பார்த்து மீண்டும் டிகோட் செய்யப் போகின்றனர் என தெரியவில்லை.
ஃபிளாஷ்பேக் விமர்சனம்: லியோ படம் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஃபிளாஷ்பேக் போர்ஷனே ஃபேக் என சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











