ஓடிடியில் வெளியான விக்ரமின் கோப்ரா படம்.. இதிலாவது ரசிகர்களை கவருமா?
சென்னை : நடிகர் விக்ரமின் கோப்ரா படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் கெட்டப்புகளுக்கு இந்தப் படம் முக்கியத்துவத்தை கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என சிறப்பான படங்களை கொடுக்கும் அறிமுக இயக்குநர்கள் பெரிய நடிகர்களுக்கு படம் பண்ணும்போது சொதப்புவது ஏன் என்ற கேள்வியையும் இந்தப் படம் எழுப்பியது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் எப்போதும் தன்னுடைய கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துபவர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் சிறப்பான விமர்சனங்களையும் விக்ரமிற்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் அவருடன் அவருடைய மகன் த்ருவ் விக்ரமும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

கோப்ரா படம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அவரது கோப்ரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. கணித ஆசிரியராக அவர் மேற்கொள்ளும் கொலைகளை மையமாக கொண்டு படம் வெளியானது. படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் அவர் ரசிகர்களை கவர்ந்தார்.

அதிகமான கெட்டப்புகள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அதிகமான கெட்டப்புகளில் விக்ரம் மிரட்டியிருந்தார். இந்தப் படத்தில் கெட்டப்புகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் திரைக்கதைக்கு கொடுக்கப்படவில்லை என்பதே விமர்சகர்களின் குற்றச்சாட்டு.

சொதப்பிய திரைக்கதை
இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி போன்ற சிறப்பான கதைக்களங்களுடன் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணியது. ஆனால் சொதப்பியது. சிறப்பான படங்களை கொடுக்கும் இயக்குநர்களும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது சொதப்புவது ஏன் என்ற கேள்வியை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடியில் வெளியீடு
இந்நிலையில் இந்தப் படம் தற்போது சோனி லைவில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் சொதப்பலான ரிசல்ட்டை கொடுத்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், அங்கு ரசிகர்களை கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கணக்கு வாத்தியார் இதற்கு விடை தருவாரா?


Click it and Unblock the Notifications











