அமேசான் பிரைமில் வெளியாகும் விக்ரமின் தங்கலான்.. அப்ப அந்த நிறுவனம் இல்லையா?
சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியானது தங்கலான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பா ரஞ்சித் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி ரிலீசான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனாலும் வசூல்ரீதியாக இந்தப் படம் சிறப்பாக அமையவில்லை.
படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தை நம்முடைய கண்முன்னே கொண்டு வந்திருந்தார் இயக்குநர் பா ரஞ்சித். இந்த கால கட்டத்தில் கேஜிஎஃப்பில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியான நிலையில், மிகச்சிறப்பான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. இந்தப் படத்தில் சியானின் மெனக்கெடல் மிக அதிகளவில் இருந்தது.

தங்கலான் படம்: நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியானது தங்கலான் படம். இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில், படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியிருந்த நிலையில், பல விஷயங்களை இந்தப் படம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. படத்தில் கேரக்டராகவே மாறி மாஸ் காட்டியிருந்தார் சியான் விக்ரம்.
சர்ச்சை காட்சிகள்: அந்த காலத்திய தமிழர்களின் கொண்டாட்டங்களையும் போராட்டங்களையும் இந்தப் படத்தின்மூலம் தெரிந்துக் கொள்ள முடிந்தது. படத்தின் கேரக்டர் தேர்வு உள்ளிட்டவற்றின்மூலம் அதிரடி காட்டியிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படம் சுதந்திர தினக்கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல கமெண்ட்ஸ்களை பெற்றது. படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையிலும் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படும் நிலையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதியே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.
ஓடிடி ரிலீசில் தாமதம்: ஆனால் குறிப்பிட்டபடி இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்தப் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி ஓடிடிக்காக கொடுப்பதாக கூறிய தொகையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் குறைக்கப் பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளருக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கலான் ஓடிடியில் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தங்கலான் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது.
அமேசான் பிரைமில் வெளியாகும் தங்கலான்: இதனிடையே நெட்பிளிக்சில் இல்லாமல் தற்போது தங்கலான் படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த மாதத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளமும் அதிகமான தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு திரையரங்குகளில் ரிலீசான விஜய்யின் கோட் உள்ளிட்ட படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











