Aaryan OTT : வசூல் வேட்டை நடத்திய விஷ்ணு விஷாலின் ஆர்யன்.. ஓடிடி ரிலீஸ்!
சென்னை: அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
ராட்ச்சன் திரைப்படம் வெற்றிக்கு பிறகு, க்ரைம் த்ரில்லர் திரைப்படத்திற்கு விஷ்ணு விஷால் பெருத்தமானவர் என்று சொல்லும் அவளவிற்கு அவர் நடிக்கும் படங்களில் மீது மக்களுக்கு தனி எதிர்பாப்பு இருந்த நிலையில், விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் திரைப்படம் கடந்த மாதம் 31ந்ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் செல்வராகனும்,போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

படத்தின் கதை: எழுத்தாளரான செல்வராகன்,இந்த சமூதாயத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தியில் இருக்கிறார். இதனால், ஒரு முன்னணி தொலைகாட்சியில் விவாத நிகழ்ச்சிக்குள் புகுந்து அங்கு இருப்பவர்களை பிணைக்கைதியாக்குகிறார். நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இளம் நடிகரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு. தான் எழுதிய கதையின்படி அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகளை நான் செய்வேன் என்று சொல்லிவிட்டு, துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
க்ரைம் திரில்லர்: கொலையாளியே இறந்துவிட்ட பிறகு அவர் சொன்னபடி எப்படி கொலைகள் நடக்கும் என்று போலீஸார் இந்த வழக்கை மேம்போக்காக பார்க்கின்றனர். ஆனால், அவர் சொன்னபடி அடுத்த கொலை நடக்க என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் குழம்புகின்றன. இதையடுத்து, இந்த வழக்கு போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. செல்வராகவன் சொன்னது போல அடுத்தடுத்த கொலைகள் நடந்ததா? இல்லையா என்பது தான் ஆர்யன் படத்தின் கதை. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த கதை பாக்ஸ் ஆபிசில் கணிசமான வசூலை அள்ளியது.
ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில், 'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற 28ந் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











