இரு பெண்களின் கண்ணீர் கதை.. பஹிஷ்கரனா புது வெப் தொடர்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பஹிஷ்கரனா புது வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத் தொடரில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இத்தொடரை முகேஷ் பிரஜாபதி இயக்கியுள்ளார்.

கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், போன்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறிய அஞ்சலி தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அஞ்சலியை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியான அஞ்சலி தொடர்ந்து நவசரா, பால், ஜான்சி என பல இணையத் தொடரில் நடித்து வருகிறார்.

Anjali OTT

பஹிஷ்கரனா: தற்போது இவர் நடிப்பில், பஹிஷ்கரனா என்கிற புது வெப் தொடர் உருவாகி உள்ளது. முகேஷ் பிரஜாபதி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த தொடரில், ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இத் தொடர் ஜீ5 தெலுங்கு ஓடிடி தளத்தில் வரும் 19ந் தேதி வெளியாக உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான Pixel Pictures Pvt Ltd அறிவித்துள்ளது

அழுத்தமான கதை: குண்டூர் கிராமத்தின் பின்னணியில் உருவாகி உள்ள இந்த தொடரில், விபச்சாரியான இரண்டு பெண்களின் வாழ்க்கையில் சந்திக்கும் அழுத்தமான உணர்வு கதை அம்சத்தை கொண்டதாக உள்ளது. காதல், துரோகம் மற்றும் விதியின் அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் இந்த இணையத் தொடர் உருவாகி உள்ளது.

Anjali OTT

அட்டகாசமான நடிப்பு: பஹிஷ்கரனாவில் அஞ்சலியின் நடிப்பு, இதுவரை நீங்கள் பார்த்திராதது. அவர் மட்டுமில்லாமல், இந்த சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களும் மிக அட்டகாசமான நடித்துள்ளனர். மேலும், ZEE5 போன்ற தேசிய அளவில் பிரபலமான தளத்தில் இந்த வெப் தொடரை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். ஒவ்வொரு பார்வையாளர்களையும் இந்த சீரிஸ் சென்றடையும் என நம்புகிறோம் என தயாரிப்பாளர் பிரசாந்தி மாலிசெட்டி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா: இதுமட்டுமில்லாமல் , அஞ்சலி நடித்த கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திகிலூட்டும் நகைக்சுவை திரைப்படத்தில், ராகுல் மாதவ், சீனிவாச ரெட்டி, சுனில், சத்யம் ராஜேஷ், ஸ்த்யா, ஷகலகா சங்கர், முகமது அலி, பிரம்மாஜி, பி. ரவிசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வசூலை அள்ளிய கீதாஞ்சலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

More from Filmibeat

Read more about: anjali ott அஞ்சலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X