Anjali: ஓடிடியில் வெளியானது கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா.. எந்த தளம் தெரியுமா?

சென்னை: நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீதாஞ்சலி திரும்ப வந்துட்ட திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் அஞ்சலி, ராகுல் மாதவ், சீனிவாச ரெட்டி, சுனில், சத்யம் ராஜேஷ், ஸ்த்யா, ஷகலகா சங்கர், முகமது அலி, பிரம்மாஜி, பி. ரவிசங்கர் மற்றும் பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

நடிகை அஞ்சலி கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, பேரன்பு, இறைவி போன்ற தமிழ் சினிமா படங்களில் தனது தனித்துவமான இயல்பான நடிப்பை வெளிக்காட்டி, யதார்த்த நடிகை என பெயர் எடுத்தார். ஆரம்பத்தில் மாடலிங் சின்ன விளம்பரத்தில் நடித்து வந்த அஞ்சலிக்கு, சிவ நாகேஸ்வர ராவ் இயக்கத்தில் தெலுங்கில் 'போட்டோ'என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் 'பிரேமலேகா ராசா' என்னும் தெலுங்கு படத்திலும் நடித்தார்.

Anjali game changer OTT

நடிகை அஞ்சலி: அந்த இரண்டு படமும் தோல்வித் திரைப்படமாக அமைந்ததால், தொடர்ந்து அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு வராததால், தமிழ் பக்கம் வந்த அவருக்கு கற்றது தமிழ் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டைசுழி, தூங்காநகரம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதனால், ஏற்பட்ட மன கசப்பால் தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

கேம் சேஞ்சர்: தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டாக தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா: இந்நிலையில்,நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திகிலூட்டும் நகைக்சுவை திரைப்படத்தில் அஞ்சலி, ராகுல் மாதவ், சீனிவாச ரெட்டி, சுனில், சத்யம் ராஜேஷ், ஸ்த்யா, ஷகலகா சங்கர், முகமது அலி, பிரம்மாஜி, பி. ரவிசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வசூலை அள்ளிய கீதாஞ்சலி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதன் இரண்டாம் பாகத்தை சிவ துர்லபதி இயக்கி இருந்த நிலையில் இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இப்படத்தை கோனா வெங்கட் பானு போகவரபுவுடன் இணைந்து திரைக்கதையை அமைத்திருந்தார். மேலும், MVV சினிமா மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் GV இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பிரவீன் லக்கராஜு இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த படம் தமிழில் அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X