பிக் பாஸ் வீட்டுக்கு வரும் பிரபல நடிகை… அவரே சொன்ன தகவல் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவரும் ரசித்துப்பார்க்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தமிழ், தெலுங்கில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. இரண்டு மொழிகளிலும் ஐந்து சீசன்களைக் கடந்துள்ளது.
தமிழில் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாகவும் தொகுத்து வழங்கினார். அதேபோல, தெலுங்கில் கடந்த மூன்று சீசன்களை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கினர்.

டிஸ்னி பிளாஸ் ஹாஸ்டார்
தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நடந்து முடிந்த சூட்டோடு, தமிழில் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதக் கடைசியில் ஆரம்பமானது. டிஸ்னி பிளாஸ் ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், கடந்த வாரத்துடன் நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார். இந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.

தெலுங்கில் ஓடிடி
தமிழைப் போலவே தெலுங்கில் ஓடிடி தளத்தில் இன்று முதல் பிக் பாஸ் நான் ஸ்டாப் என்ற பெயரில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சியை நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார். அதற்கான டிவி புரோமோக்கள் ஏற்கனெவே வெளியாகி உள்ளது. தெலுங்கு ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெற உள்ளதாம். இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்.

பிந்துமாதவி
பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரியாக பிந்துமாதவி கலந்து கொள்ள இருகிறார். இதுகுறித்து, அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன். ரசிகர்கள் தனக்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கைவசம் உள்ள படங்கள்
நடிகை பிந்து மாதவி சேரனின் பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர், கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது யாருக்கும் அஞ்சேன், பகைவனுக்கும் அருள்வாய், மயான் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











