Shaitaan movie: நாளை ஓடிடியில் வெளியாகும் ஜோதிகாவின் ஷைத்தான் படம்.. மிரளத் தயாரா மக்களே!

சென்னை: நடிகர் மாதவன், அஜய் தேவகன், ஜோதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் ஷைத்தான். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ஜோதிகா ஹிந்தியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு இந்த ரீ-என்ட்ரி படம் மிகச்சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் சூனியம் செய்யும் மந்திரவாதி கேரக்டரில் மாதவன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரிடம் சிக்கும் பெண்ணாக அஜய் தேவகன் ஜோதிகாவின் மகளாக நடித்துள்ளார் ஜான்வி. மிகச் சிறந்த அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜய் தேவ்கன் - ஜோதிகா குடும்பத்தினர், விடுமுறையை கழிப்பதற்காக தங்களது பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். வழியில் மாதவனை சந்திக்கும் அவர்கள், அவர் மூலம் தங்களது மகள் பில்லி சூனியத்தில் சிக்கி உள்ளதை அறிகின்றனர். தொடர்ந்து தன்னுடைய மகளை அதிலிருந்து மீட்கும் பெற்றோராக தங்களது வலி, வேதனை, அச்சம் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

Actress Jyothika amp amp Madhavan s Shaitaan movie to be streaming on Netflix OTT from tomorrow

ஷைத்தான் படம்: நடிகர் மாதவன். அஜய் தேவகன் மற்றும் ஜோதிகா கூட்டணியில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியான படம் ஷைத்தான். இந்தப் படம் திரில்லர் ஜானரில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி மாஸ் காட்டியது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார் ஜோதிகா. இந்நிலையில் இந்த படம் நாளை முதல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிப்போக்கனாக மாதவன்: படத்தில் அஜடய தேவ்கன், மாதவன், ஜோதிகா இவர்களுடன் ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோரின் கேரக்டர்களும் சிறப்பாக அமைந்திருந்தன. சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட வெற்றி படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விகாஸ் பால், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ள சூழலில் அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா இரு குழந்தைகளுக்கு பெற்றோராக நடித்துள்ளனர். சந்தோஷமாக வாழும் இந்த குடும்பம், விடுமுறைக்காக தங்களது பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு வழிப்போக்கனாக வரும் மாதவனை இந்த குடும்பம் எதேச்சையாக சந்திக்க, அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

பில்லி சூனியம் செய்யும் மந்திரவாதி: மாதவனுடன் அஜய் தேவ்கன் குடும்பத்தினர் நண்பர்களாகின்றனர். இதையடுத்து அவர் கொடுக்கும் லட்டை அஜய் தேவ்கனின் மகள் ஜான்வி சாப்பிட, அவருக்குள் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. இதையடுத்து அஜய் தேவ்கனின் பண்ணை வீட்டிற்கு மாதவன் வர, குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. அங்கு ஜான்வி மாதவனின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதையும் பார்க்க முடிகிறது. தொடர்ந்து இந்த படத்தில் மாதவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜான்வி எப்படி மீட்கப்படுகிறார் என்பதகஇந்தப் படத்ன் கதைக்களம் காணப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான வஷ் என்னும் படத்தின் ரீமேக்காக ஷைத்தான் படத்தை விகாஸ் பால் இயக்கியுள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் ஷைத்தான் படம்: இதனிடையே இந்தப் படம் நாளைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூனியம் செய்யும் மந்திரவாதி ரோலில் நடிகர் மாதவன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் 200 கோடி ரூபாய்களை தாண்டி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஓடிடியிலும் ரிலீசாக உள்ளது. போலோ படத்திற்கு பிறகு அதன் தோல்விக்கு பிறகு அஜய் தேவனுக்கு ஷைத்தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்: இந்தப் படம் ஓடிடி நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு கை மாறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்லேயே இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடியதால், ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. படம் இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க தவறியவர்கள் தங்களது வீடுகளில் பார்க்க காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய திரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X