மீண்டும் நெட்ஃபிளிக்சில் வெளியாகும் நயன்தாராவின் அன்னபூரணி படம்.. அதுலதான் ட்விஸ்ட்!
சென்னை: நடிகை நயன்தாராவின் 75வது படமாக கடந்த ஆண்டில் திரையரங்குகளில் ரிலீசானது அன்னபூரணி படம். நயன்தாரா, ஜெய், சத்யராஜ். கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்த படத்தை இயக்கியிருந்தார் நிலேஷ் கிருஷ்ணா. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படம் வெளியான நிலையில் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் எழுந்ததையடுத்து படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் படத்தயாரிப்பு நிறுவனம் இந்து அமைப்புகளிடமும் மன்னிப்பு கேட்டிருந்தது. தற்போது இந்தப் படம் மீண்டும் நெட்ஃபிளிக்சில் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் அன்னபூரணி. நயன்தாராவின் 75வது படமாக உருவாகியிருந்த இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் படத்தில் நயன்தாராவின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் netflix ஓடிடியில் இந்த படம் வெளியானது. படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தனர்.
ஓடிடியிலிருந்து நீக்கம்: இந்நிலையில் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அன்னபூரணி படத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. படத்தை தடை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் இந்து அமைப்புகளிடம் பட தயாரிப்பு நிறுவனமான ஜீ நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.
நயன்தாரா வருத்தம்: சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கும்வரையில் படத்தை ஓடிடியிலிருந்து நீக்குவதாகவும் கூறப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை நயன்தாராவும் படம் ரசிகர்களை கவர்வதற்காகவே எடுக்கப்பட்டதாகவும் மத உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல என்றும் வருத்தம் தெரிவித்திருந்தார். அனைத்து தரப்பினரின் மத உணர்வுகளையும் தான் மதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நாளை முதல் மீண்டும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அன்னபூரணி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஓடிடியில் அன்னபூரணி: இதுகுறித்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நாளை முதல் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் ரசிகர்களுக்கு காண கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்துவதாக விமர்சனங்களை எழுப்பிய அன்னபூரணி படம் விரைவில் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு இந்திய ரசிகர்களின் பார்வைக்கும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











