நான் ஒண்ணும் உத்தமன் இல்லை.. நயன்தாராவை அப்படிதான் பார்த்தேன்.. விக்னேஷ் சிவன் வாக்குமூலம்!
சென்னை: நடிகை நயன்தாரா பல ஆண்டுகளை கடந்தும் இன்னும் சிறப்பான நாயகியாக தன்னுடைய கேரியரை தொடர்ந்து வருகிறார். தமிழில் அடுத்தடுத்த இவரது படங்கள் ரிலீசாகி வருகின்றன. அவை அனைத்திலும் சிறப்பான நயன்தாராவை பார்க்க முடிகிறது. இவருக்கு சமீப காலங்களாக படங்கள் சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக் கொண்டார் நயன்தாரா. இவர்களது திருமணம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. வரும் 18ம் தேதி Nayanthara : Beyond the fairytale என்ற பெயரில் அவரது ஸ்டோரி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தன்னை சிறப்பான நடிகையாக நிலை நிறுத்தி அதை தொடர்ந்தும் வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி திருமணம் நடந்த நிலையில் அடுத்ததாக வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார் நயன்தாரா. ஆனால் இவை அனைத்துமே அவரது கேரியரை பாதிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்: அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படம் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கவினுடன் இணைந்து ஒரு படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் காதலித்து தங்களது திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இவர்கள் நடத்தினர்.
ஓடிடியில் வெளியாகும் ஆவணப்படம்: தொடர்ந்து இவர்களது திருமணம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் அதன்மூலம் கண்டு களிக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்கள் திருமண வீடியோ ஓடிடியில் வெளியாகாத நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நயன்தாரா ஆவணப்படத்தின் டிரைலரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆவணப்படத்தின் பிரமோவை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
புதிய பிரமோ: அதில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை தான் முதன் முதலில் பார்த்தது குறித்து பேசியுள்ளார். பாண்டிச்சேரியின் சாலையில் நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், தன்னுடைய போர்ஷன் வருவதற்காக தான் காத்திருந்ததாகவும் அப்போது தான் விக்னேஷ் சிவனை தான் வித்தியாசமாக பார்க்க நேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது அவர் மிகவும் க்யூட்டாக தெரிந்ததாகவும் இயக்குநராக அவர் காட்சிகளை விளக்கியதும் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பேசிய விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் ஷூட்டிங் நிறைவடைந்த உடன் தன்னிடம் பேசிய நயன்தாரா, தான் நானும் ரவுடிதான் சூட்டிங்கை மிஸ் செய்தாக குறிப்பிட்டதை தெரிவித்துள்ளார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் பேச்சு: இதையடுத்து தானும் அந்த சூட்டிங்கை மிஸ் செய்வதாக நயன்தாராவிடம் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த நிகழ்வு குறித்து தற்போது பிரமோவில் பேசியுள்ள விக்னேஷ் சிவன், தான் ஒன்றும் உத்தமன் இல்லை என்றும் எந்த பெண்ணையும் அவரது அழகு குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தான் நயன்தாராவை அப்படிப்பட்ட கோணத்தில் பார்க்கவில்லை என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இதுவே இவர்களை காதலர்களாகவும் தொடர்ந்து திருமண பந்தத்தில் கூட்டி செல்லவும் காரணங்களாக அமைந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் நயன்தாராவின் இந்த ஆவணப்படம் வெளியாக உள்ள நிலையில், இதை குறைவான காசிலேயே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications











