ஆயிரம் சர்ச்சை.. ஆனாலும் ஓடிடியில் சாதனை படைத்த ‘தி கேரளா ஸ்டோரி’

பாலிவுட் நடிகை அதா ஷர்மாவுடன், யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி, தேவதர்ஷினி மற்றும் விஜய் கிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன்ஷைன் பிக்சர்ஸ் சார்பில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்த இத்திரைப்படத்திற்கு விஷாக் ஜோதி மற்றும் விரேஷ் ஸ்ரீவல்சா இசையமைத்துள்ளனர்.

பாலிவுட் நடிகை அதா ஷர்மாவுடன், யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி, தேவதர்ஷினி மற்றும் விஜய் கிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன்ஷைன் பிக்சர்ஸ் சார்பில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்த இத்திரைப்படம் விஷாக் ஜோதி மற்றும் விரேஷ் ஸ்ரீவல்சா இசையமைத்துள்ளார்.

Adah Sharmas The Kerala Story breaking records for ZEE5

தி கேரளா ஸ்டோரி: இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளுடன் இருப்பதாக சொல்லப்பட்ட இத்திரைப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் காட்டப்பட்டது.

ஏகப்பட்ட சர்ச்சை: மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்சிகள் இருந்தன. தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என இணையத்தில் இப்படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்த படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, இப்படத்தின் இயக்குநர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடை உத்தரவை நீக்கினார்.

ஓடிடியில் அடித்து நொறுக்கியது: படம் குறித்த பல சர்ச்சைகள் எழுந்த போதும், இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது. இத்திரைப்படம் கடந்த 16ந் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் படம் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் 150 மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர். இது ZEE5 பிளாட்ஃபார்மில் சாதனையாக பார்க்கப்படுகிறது. பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டுவிதமான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் கணிசமான வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X