twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதியின் மௌனப் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை!

    |

    சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

    தமிழை தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்க சமீபத்தில் வெளியான உப்பன்னா மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ஹிந்தியிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    அசத்தலான சியான் 60… இதுதான் டைட்டில்… வெளியான சீக்ரெட் ! அசத்தலான சியான் 60… இதுதான் டைட்டில்… வெளியான சீக்ரெட் !

    இந்தியில் ஏற்கனவே மும்பை கார் மற்றும் ஷாகித் கபூர் நடிக்கும் பிரமாண்ட வெப் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கும் மௌன திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகை கதாநாயகியாக இணைந்துள்ளார்.

    இயல்பான நடிப்பு

    இயல்பான நடிப்பு

    நடிகர்கள் ஒருமுறை ஹீரோ அந்தஸ்தை பெற்று விட்டால் அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டுமே நடிப்பதில் கண்டிப்பாக இருப்பார்கள் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி அதிலிருந்து முற்றிலும் மாறுபடுவதால் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள்,சிறப்புத் தோற்றம் என எது கிடைத்தாலும் கதா பாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் வழக்கம் கொண்ட விஜய்சேதுபதிக்கு தமிழில் சினிமாவை கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல திரைப்படங்கள் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட்டு கொண்டே வர புஷ்கர்,காயத்ரி இயக்கத்தில் நடித்த விக்ரம் வேதா இவரை பாலிவுட் வரைக் கூட்டிச் சென்றுள்ளது. தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா இப்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட அதில் சைஃப் அலி கான் மற்றும் ஹிரித்திக் ரோஷன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர்,காயத்ரி ஹிந்தியிலும் இயக்குகின்றனர்.

    பச்சோந்தி போல

    பச்சோந்தி போல

    விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படங்களை திரைப்பிரபலங்கள் எப்படி இந்த மனுஷன் இப்படி எல்லாம் நடிக்கிறார். நடிக்கிறார் என்ற எந்த ஒரு சாயலும் தெரியாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தவாறு பச்சோந்தி போல மாறுகிறார் என வியந்து பார்த்துக் கொண்டிருக்க தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அதிலும் பாராட்டுக்களைப் பெற்ற விஜய் சேதுபதி அடுத்ததாக வில்லன் கலந்த அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்த உப்பனா திரைப்படம் முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களின் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உபன்னா படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை பலரும் வியந்து பார்க்க தெலுங்கிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. மலையாளத்திலும் சில படங்களில் விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் 19 1 a என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்.

    பவானி கதாபாத்திரம்

    பவானி கதாபாத்திரம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை செய்திருந்தது. விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். பொதுவாக விஜய்யின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்தை விட சற்று தனிந்தே இருக்கும் ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் சரிசமமாக மாஸான காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னாள் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரங்களில் விடவும் என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கொஞ்சம்கூட நல்லவன் இல்லாத வில்லனாக விஜய் சேதுபதி நடித்து மிரட்டி இருந்தார். பவானி என்ற அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளிலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

    காந்தி டாக்ஸ்

    காந்தி டாக்ஸ்

    இதுவரை மாஸா கெத்தா ஸ்டைலா வசனம் பேசி நடித்து வந்த விஜய் சேதுபதி முதல் முறையாக வசனங்கள் எதுவும் இல்லாத மௌனப் படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பேலேகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு காந்தி டாக்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தி,மராத்தி, தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கமல்ஹாசனின் பேசும் படம் தான் கடைசியாக வெளியான மௌனப் படமாக இருந்தது.

    கதாநாயகியாக அதிதி ராவ்

    கதாநாயகியாக அதிதி ராவ்

    அதன் பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி நடிப்பில் வசனங்கள் இல்லா மௌனப் படமாக காந்தி டாக்ஸ் உருவாகி வரும் நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை அதிதி ராவ் அதன்பிறகு செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்பொழுது ஹே சனாமிகா மற்றும் மஹா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் என்ற படத்தில் ஏற்கனவே நடிக்க வேண்டியது . ஆனால் அந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இப்பொழுது இருவரும் இணைந்து காந்தி டாக்ஸ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வசனங்கள் எதுவும் இல்லாத மௌனப் படமாக இப்படம் உருவாகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

    English summary
    South Indian actress Adithi Rao has joined Vijay Sethupathi for a new web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X