இளம் நடிகர் நோ சொல்லியும் கிஸ் அடித்த ரசிகை.. தீயாய் பரவும் வீடியோ.. இது ஹராஸ்மென்ட் இல்லையா?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பெண் ரசிகை ஒருவர் விடாமல் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி மீது ரசிகர் ஒருவர் தோளில் கை போட முயன்றதே ஹராஸ்மென்ட் எனக் கூறி நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அந்த மாணவனை கண்டித்து இருந்தனர்.
இந்நிலையில், பாலிவுட்டில் இளம் நடிகர் ஒருவருக்கு இப்படியொரு இக்கட்டான தொல்லை நேர்ந்துள்ளதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இதுவும் ஹராஸ்மென்ட் தான் என அந்த பெண்ணை விளாசி வருகின்றனர்.

ஏகப்பட்ட ரசிகைகள்
லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் கடந்த 2009ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் ஆதித்யா ராய் கபூர். ஆஷிக் 2 படத்தில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட பெண் ரசிகைகளை நாடு முழுவதும் சம்பாதித்தார். ஓகே ஜானு, மலங், லூடோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஆதித்யா ராய் கபூர்.

தி நைட் மேனேஜர்
சைட் ஹீரோ எனும் வெப்சீரிஸ் மூலம் 2018ல் ஓடிடியிலும் அறிமுகமான ஆதித்யா ராய் கபூர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ள தி நைட் மேனேஜர் வெப்சீரிஸிலும் ஹீரோவாக நடித்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ள அந்த ஓடிடி படைப்பில் இவருடன் இணைந்து அனில் கபூர் மற்றும் சோபிதா துலிபாலா நடித்துள்ளனர்.

ப்ரீமியர் ஷோ
நேற்று இரவு தி நைட் மேனேஜர் வெப்சீரிஸின் ப்ரீமியர் ஷோவில் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கலந்து கொண்டார். அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகை ஒருவர் செய்த செயல் ஆதித்யா ராய் கபூரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் டென்ஷன் ஆக்கி உள்ளது.

டார்ச்சர் பண்ண ரசிகை
ஆதித்யா ராய் கபூரை பார்த்ததுமே அந்த ரசிகை அவரிடம் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் ஹீரோ இருக்கும் ஹைட்டுக்கு அவரை நெருங்க முடியாத அளவில் இருந்த அந்த ரசிகை நடிகரை வளைத்து கிஸ் அடிக்க முயன்று டார்ச்சர் செய்தார். ஆனால், சிரித்துக் கொண்டே அந்த சூழ்நிலையை ஆதித்யா ராய் கபூர் கடந்து சென்றார்.

ஒரே ஒரு கிஸ்
முதல் முறை அந்த ரசிகை கிஸ் அடிக்க முயற்சி செய்த போதே ஆதித்யா ராய் கபூர் நோ சொல்லிவிட்டார். ஆனாலும், விடாது, ஒரே ஒரு கிஸ் என மறுபடியும் ஆதித்யா ராய் கபூரை வளைத்து கிஸ் அடிக்க அந்த ரசிகை முயற்சி செய்தது அவரையும் அவரது ரசிகர்களையும் பயங்கர கடுப்பில் ஆழ்த்தியது.

முத்தம் கொடுத்து விட்டார்
ஆதித்யா ராய் கபூர் அந்த ரசிகைக்கு கன்னத்தை காட்டாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆக நினைத்த நிலையில், விடுவேனா உன்னை என்கிற ரேஞ்சில் அவரது கைக்கு முத்தம் கொடுத்து விட்டார் அந்த ரசிகை. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் பலரும் அந்த பெண்மணியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதுவும் ஹராஸ்மென்ட் தான்
இதே ஒரு ஹீரோயினுக்கு நடந்திருந்தால் பலரும் இந்நேரம் பஞ்சாயத்தை கிளப்பி இருப்பார்கள் என்றும், இதுவும் ஹராஸ்மென்ட் தான் என்றும் நடிகர்களை இப்படி பொதுவெளியில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதும் தப்பான செயல் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











