நோ கட்.. நோ சென்சார்.. ஆபாசத்தை அள்ளிவீசிய வெப் தொடர்கள்..தயவு செய்து குடும்பத்தோடு பார்க்காதீங்க!

சென்னை : ஓடிடி தளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்கள போட்டி போட்டுக்கொண்டு படங்கள் மற்றும் வெப் தொடர்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

திரையரங்கில் வெளியாகும் படங்களில் அடல்ட் காட்சிகள் இருந்தாலோ ஆபாச வசனம், கெட்டவார்த்தை என எது வந்தாலும், சென்சார் போட்டு அந்த காட்சியை நீக்கிவிடும் இல்லை ம்யூட் போட்டுவிடும்.

அப்படியும் படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சியோ, வசனமோ இருந்தால், அந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து மக்களை அலர்ட் செய்து விடுவார்கள்.

கட்டுப்பாடு தேவை

கட்டுப்பாடு தேவை

பெருகி வரும் ஓடிடி தளங்களில், ஆபாச காட்சிகள் தலைவிரித்தாடுகின்றன. படுக்கை அறை காட்சி, ஆபாச உடை, ஆபாச வசனம் என அனைத்தும் வரம்பு மீறி இருக்கிறது. இது இளம் தலைமுறையினருக்கு தவறான முன் உதாரணமாகிவிடும் என்பதால், ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும், வெப் சீரிஸ்களும் சென்சார் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆபாச வெப் தொடர்

ஆபாச வெப் தொடர்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பலத்தொடர்களில் படுமோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குடும்பத்தோடு பார்க்கக்கூடாது சில வெப் தொடர்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகள் நிறைந்த இந்த தொடர்களை தப்பித் தவறிக்கூட குடும்பத்தோடு பார்த்துவிடாதீர்கள்.

ராணா நாயுடு

ராணா நாயுடு

காதை மூடி பார்க்கவா? கண்ணை மூடி கேட்கவா? என தலைப்பு போடும் அளவுக்கு படுமோசமான வெப் தொடராக உள்ளது ராணா நாயுடு. பாகுபலி படப்புகழ் ராணா டகுபதி, வெங்கடேஷ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. இலை மறை காய்மறையாக எதுவுமே இல்லாமல் அனைத்தும் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று அறுவறுப்படைந்தார்கள். இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம் என ராணா டகுபதியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விலங்கு

விலங்கு

இயக்குநர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, ரேஷ்மா பசுபுலேட்டி நடித்த வெப் தொடர் விலங்கு ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், போலீஸ் எஸ்.ஐ பரிதியாக விமல் நடித்துள்ளார். ஃபீல்ட் அவுட் நடிகராக முத்திரை குத்தப்பட்ட விமலுக்கு இந்த தொடர் கம்பேக்காக அமைந்தது. க்ரைம் திரில்லர் தொடரான இதில், பல படுக்கை அறை காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

ட்ரிபிள்ஸ்

ட்ரிபிள்ஸ்

இந்த ஆபாச வெப் தொடர் வரிசையில் இணைந்த மற்றொரு தொடர் ட்ரிபிள்ஸ்.கடந்த 2020ம் ஆண்டு வெளியான இந்த தொடரில் ஜெய் மற்றும் வாணி போஜன் நெருக்கமாக இருக்கும் காதல் காட்சிகள் நம்மை மூச்சு முட்டவைத்துவிடும். தமிழ் வெப் தொடரிலேயே இத்தனை ஆபாசம் என்றால், இந்தி வெப் தொடரில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது.

More from Filmibeat

Read more about: ott
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X