ரஜினிகாந்த் மகள்களுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் ஓடிடி நிறுவனங்கள்.. இப்படியொரு பிரச்னையா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை. இதில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட லால் சலாம் திரைப்படம் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக கிளம்பிய பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. அதன் பின்னர், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் லால் சலாம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடர்ந்து அந்த படம் எந்தவொரு ஓடிடியிலும் ஸ்ட்ரீம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாகி வரும் 'குருதிப்புனல்' படத்துக்கு நிதி ரீதியான சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சொதப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியினருக்கு மகளாக பிறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். அந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில், விவாகரத்து செய்து பிரிந்தனர். நடிகர் தனுஷை வைத்து '3' படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு முதல் படமே தோல்விப் படமாக மாறியது. அதன் பின்னர், கெளதம் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய வை ராஜா வை படமும் ஓடவில்லை. கடைசியாக அப்பாவை வைத்து எடுத்த லால் சலாம் படமும் அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது.
கோச்சடையான் இயக்குநர்: அக்காவை போலவே தங்கை செளந்தர்யா ரஜினிகாந்தும் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். 2014ம் ஆண்டு அப்பா ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை. அதன் பின்னர், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார் அதுவும் ஃபிளாப் ஆனது.
அசோக் செல்வன் படத்துக்கு ஆப்பு: பல வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கிய நிலையில், நாமும் மீண்டும் ஒரு படம் இயக்கலாம் என அசோக் செல்வனை வைத்து அமேசான் தயாரிப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறாராம் செளந்தர்யா ரஜினிகாந்த். கமல்ஹாசனின் தரமான படைப்பான 'குருதிப்புனல்' டைட்டிலில் உருவாகி வரும் அந்த படத்துக்கு தற்போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சிக்கலில் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே குறிப்பிட்ட பட்ஜெட்டை மீறி செலவு அதிகரித்த நிலையில், அமேசான் பிரைம் நிறுவனம் கூடுதலாக பட்ஜெட் ஒதுக்க முடியாது என கைவிரித்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











