Drishyam 3 OTT Release Date: கருப்பு படத்தைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களுக்கு த்ரிஷ்யம் 3 ட்ரீட்.. எப்போ?

சென்னை: ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக், ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார்.

இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.

After Karuppu Amazon Prime Video ready to give Drishyam 3 OTT feast on this date for his viewers

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ இந்த வாரம் சூர்யாவின் கருப்பு படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக, இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் திரில்லர்-டிராமா திரைப்படத் தொடர்களில் ஒன்றான த்ரிஷ்யம் சீரிஸின் அடுத்த பாகமான "திரிஷ்யம் 3" திரைப்படத்தை ஜூன் 18 ஸ்ட்ரீம் செய்கிறது.

எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள இந்தத் திரைப்படத் தொடர், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இப்படம், Pen Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas மூலம் உருவாகியுள்ளது.

மோகன்லால், மீனா மற்றும் சித்திக் மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட டப்பிங் பதிப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.

திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தனது கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். ஆனால் கடந்த காலம் புதைக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்திருக்க மறுக்கிறது.

அந்தத் திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயத் தொடங்கும் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது மகள் அஞ்சுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சி, உயிருக்கு ஆபத்தான சதியாக மாறும்போது, ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆபத்தான போராட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்.

பழைய எதிரிகள் புதிய நோக்கத்துடன் மீண்டும் வர, பயம், குற்றவுணர்வு மற்றும் சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும் சூழலில், தனது குடும்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது புத்திக்கூர்மையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கிற கதையில் ஜித்து ஜோசப் த்ரிஷ்யம் 3 படத்தை சினிமா ரசிகர்களுக்காக வழங்கியுள்ளார். தியேட்டரில் தவறவிட்டவர்களும் ரீவாட்ச் பார்க்க விரும்புபவர்களும் மிஸ் பண்ணாமல் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் ஜூன் 18ம் தேதி படத்தை கண்டு ரசியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X