Manjummel boys: ரிலீசுக்கு பிறகு 10 மடங்கு உயர்ந்த மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி பிசினஸ்.. ஓவர் போட்டியாம்!

சென்னை: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களாக மல்லுவுட்டில் மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ் படம். கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு சந்திக்கும் விபரீதத்தை மையமாக வைத்து சர்வைவல் திரில்லராக வெளியாகியுள்ளது இந்தப் படம். 40 சதவிகிதம் மலையாளம் மற்றும் 60 சதவிகிதம் தமிழில் வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மலையாளத்தை காட்டிலும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள குணா குகை மற்றும் குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் படத்தின் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

நண்பர்கள் அனைவரும் இணைந்து உல்லாச சுற்றுலாவிற்கும் செல்லும் இடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. ஆனாலும் படத்தில் ஹீரோயின் இருப்பதாக திரைக்கதையை அமைத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் விமர்சனங்களாக அமைந்துள்ளது. படத்தை கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் இயக்குநர்கள் பா ரஞ்சித் வெங்கட்பிரபு, சந்தானபாரதி உள்ளிட்டவர்களும் பாராட்டியுள்ளனர். படம் சில தினங்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. மலையாளத்தில் சில படங்களே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில் இந்தப் படமும் அவற்றில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.

After success of Manjummel boys movie OTT platforms are bidding to acquire

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: மலையாளத்தில் சமீபத்தில் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகின்றன. இயக்குநர் சிதம்பரம் டைரக்ஷனில் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் அந்த வகையில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் ரசிகர்களை இந்தப் படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன், ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குணா. இந்தப் படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம், குணா படத்திற்கு தற்போது அதிகமான கவனத்தை பெற்றுத் தந்துள்ளது.

குணா குகை: கொடைக்கானலில் குணா குகையில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் குணா படத்தை கமல்ஹாசன் -சந்தானபாரதி கூட்டணி உருவாக்கியிருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தப் படம் சரியான கவனிப்பிற்கு உள்ளாகவில்லை. இந்தப் படத்தின் பாடல் கண்மணி அன்போட என்று அதிகமான கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படததில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்ட குணா குகை மற்றும் கண்மணி அன்போட பாடல் இரண்டுமே கையாளப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையும் வெற்றிப் படமாக்கியுள்ளது. குணா படத்திற்கும் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவியும் பாராட்டுக்கள்: மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கமல்ஹாசன், சந்தான பாரதி, நடிகை ரேகா உள்ளிட்ட குணா படக்குழுவினர் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, மெய்சிலிர்த்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்பு வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதேபோல இயக்குநர்கள் வெங்கட்பிரபு, பா ரஞ்சித் உள்ளிட்டவர்களும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தப் படம் ரிலீசுக்கு பின்பு வசூலை திரையரங்குகளில் மட்டுமில்லாமல் மற்ற வழிகளிலும் குவித்து வருகிறது.

10 மடங்கு உயர்ந்த ஓடிடி பிசினஸ்: படத்தின் ரிலீசுக்கு முன்பு இந்தப் படத்தின் ஓடிடி வியாபாரம் சரியாக கைக்கொடுக்கவில்லை. படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாத நிலையில் படத்தை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் சக்சசையொட்டி ஏராளமான ஓடிடி தளங்கள் நீ நான் என படத்தை வாங்க போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கூறப்பட்ட தொகையை காட்டிலும் தற்போது 10 மடங்கு அதிகமாக கொடுத்து படத்தின் ஓடிடி உரிமையை பெற போட்டி நிலவுகிறதாம். மலையாளத்திலேயே இந்தப் படம் வெளியான நிலையில், தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த சிறப்பாக திரையரங்குகளில் படம் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X