வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி வெப் தொடர்.. ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதை!

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் தனுஷ் உள்ளிட்டவர்களை கொண்டு சிறப்பான பல படங்களை கொடுத்து சிறப்பான இயக்குநராக உள்ளவர்.

தற்போது சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களை கொண்டு விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தயாரிப்பையும் மேற்கொண்டுவரும் இவர் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை, ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டில் சிறப்பான கவனம் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். தேசிய விருது இயக்குநரான இவர், தனுஷுடனான கூட்டணியில் சிறப்பாக செயல்படுபவர். தற்போது சூரியை நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 விடுதலை படம்

விடுதலை படம்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கும் முக்கியமான கேரக்டராம். முன்னதாக இந்தக் கேரக்டரை கேமியோ கதாபாத்திரமாகவே வைத்திருந்த வெற்றிமாறன், சூட்டிங் துவங்கிய பின்பு, கேரக்ரரை வலுப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

 இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், விரைவில் தற்போது உருவாகிவரும் முதல் பாகம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுறிது.

சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல்

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், விடுதலை படத்தின் சூட்டிங் தாமதமானதால் சூர்யா படமும் தாமதமாகி வருகிறது. இதையடுத்து தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார்.

பேட்டைக்காளி வெப் தொடர்

பேட்டைக்காளி வெப் தொடர்

இதனிடையே இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். தற்போது இவரது தயாரிப்பில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்திற்காக பேட்டைக்காளி என்ற வெப் தொடர் உருவாகி வருகிறது. தீபாவளியையொட்டி வெளியாகவுள்ள இந்தத் தொடர் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

சீரிசிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

சீரிசிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

அண்ணனுக்கு ஜே என்ற படத்தை இயக்கிய லா ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த வெப் தொடரின் காட்சிகள் தற்போது யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை பார்த்துள்ள ரசிகர்கள், அவரது தயாரிப்பில் உருவாகும் இந்த சீரிசிற்கு காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X