Farhana OTT release: ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தீராக் காதல் படம் வெளியான நிலையில், அடுத்த வாரம் ஃபர்ஹானா திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் செல்வராகவன் நடிப்பில் ஃபர்ஹானா திரைப்படம் உருவாகி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படம் வெளியான உடனே ஃபர்ஹானா வெளியான நிலையில், இந்த படத்தையும் ரசிகர்கள் பலரும் தியேட்டரில் பார்ப்பதை தவிர்த்து விட்டனர்.

ஓடிடியில் ஓடுது: பெரிய நடிகர்கள் படங்களை தவிர்த்து மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை பெரிதாக மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதையே அதிகளவில் தவிர்த்து வருகின்றனர்.
அதிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 6 மாதத்தில் அரை டஜன் படங்களை ரிலீஸ் செய்த நிலையில், எந்த படமும் தியேட்டரில் பெரிதாக ஓடாமல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
நெட்பிளிக்ஸில் தீராக் காதல்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய் நடித்த தீராக் காதல் திரைப்படம் தியேட்டரில் வெளியான போதே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், வசூலில் பெரிதளவில் படம் தடம் பதிக்கவில்லை.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான தீராக் காதல் திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் அந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஜெய்யின் முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், ஜெய்யுடன் மீண்டும் சேர்ந்து வாழ போராடும் போராட்டம் நிறைந்த காட்சிகள் திகில் கலந்த ரொமான்ஸ் பட அனுபவத்தை கொடுத்ததாக பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
ஃபர்ஹானா ஓடிடி ரிலீஸ்: தீராக் காதல் படத்துக்கு முன்பாகவே தியேட்டரில் வெளியான ஃபர்ஹானா திரைப்படம் இதுவரை ஓடிடியில் வெளியாகவில்லையே எப்போது ஓடிடியில் வெளியாகும் பொறுமையாக வீட்டிலேயே உட்கார்ந்து பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. ஒவ்வொரு ஓடிடிக்கு ஒரு படம் என்கிற விதத்தில் பல ஓடிடிக்களை இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் கவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாரமே வந்திருந்தால் பக்ரீத் ஸ்பெஷலாக மாறியிருக்கும்!


Click it and Unblock the Notifications











