Suzhal 2 Trailer: ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமில்லை.. சுழல் 2வில் இத்தனை ஹீரோயின்களா?.. டிரெய்லர் எப்படி?

சென்னை: விக்ரம் வேதா இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சுழல் வெப்சீரிஸ் தமிழ் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. சொந்த சித்தப்பாவே இப்படியொரு காமக் கொடூரனாக இருப்பானா என்கிற கேள்வியை எழுப்பியது. பிரம்மா மற்றும் அனுச்சரன் முருகையன் அந்த வெப்சீரிஸை இயக்கி இருந்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், கதிர், ஸ்ரேயா ரெட்டி என பல சினிமா பிரபலங்கள் நடித்த அந்த வெப்சீரிஸ் பெரும் வரவேற்பை ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில், அதன் 2வது சீசன் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

OTT Suzhal 2 Aishwarya Rajesh 2

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள சுழல் 2 வெப்சீரிஸின் பயங்கரமான டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமின்றி மேலும், சில இளம் ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்.

OTT Suzhal 2 Aishwarya Rajesh 2

சுழல் கதை என்ன?: அப்பா பார்த்திபன் அம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மகள்களான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது சகோதரிக்கு சொந்த சித்தப்பாவாக நடித்த இளங்கோ குமரவேல் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவரை வதம் செய்வதோடு முதல் சீசனை முடித்திருப்பார்கள். இந்நிலையில், 2வது சீசனில் சிறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடைக்கப்பட்டு இருக்க, அவரை மீட்க போராடும் வழக்கறிஞராக வருகிறார் நடிகர் லால்.

OTT Suzhal 2 Aishwarya Rajesh 2

சுழல் 2 டிரெய்லர் எப்படி இருக்கு?: எனக்கு நீங்க அப்பா மாதிரி என போலீஸ் அதிகாரியான கதிர் தனது காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை காப்பாற்ற லால் உதவியை நாடி வரும் நிலையில், திடீரென லால் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு யார் காரணம் என்று பார்த்தால் பல இளம்பெண்கள் என்பது கதிரின் விசாரணையில் தெரிய வர லால் அந்தளவுக்கு மோசமானவரா? என்கிற ட்விஸ்ட்டுடன் சுழல் 2 டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

OTT Suzhal 2 Aishwarya Rajesh 2

மஞ்சிமா மோகன், கெளரி கிஷன்: சுழல் வெப்சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்த நிலையில், இந்த சீசன் 2வில் அவருடன் சேர்ந்து மேலும், சில இளம் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மஞ்சிமா மோகன், 96 புகழ் கெளரி கிஷன், சாந்தினி தமிழரசனம், மோனிஷா பிளெஸ்ஸி உள்ளிட்ட தெரிந்த முகங்களும் சில புதுமுக நடிகைகளும் மிரட்டலான கொலையாளிகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லால், கயல் சந்திரன், சரவணன் உள்ளிட்ட பலர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கதையை இன்னமும் காத்திரமாக பிரம்மா மற்றும் சர்ஜுன் இணைந்து இயக்கியுள்ளனர். வரும் பிப்ரவரி 28ம் தேதி அமேசான் பிரைமில் ரசிகர்களுக்கு செம வேட்டை காத்துக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X