Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது இத்தனை மொழிகளில் வெளியாகுதா.. ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யாவின் சுழல் வெப் தொடர்!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சுழல் வெப் தொடர்.
இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.
இந்தத் தொடரை பிரபல இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி தயாரித்துள்ளனர்.
ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஓடிடிக்கு பெரும் வரவேற்பு
திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடி தளங்களையும் ரசிகர்கள் அதிகமாக பார்க்கத் துவங்கியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே குறைந்த கட்டணங்களை செலுத்தி இத்தகைய ஓடிடி தளங்களை பார்க்கும் வசதி உள்ளதால் ஓடிடி தளங்களுக்கான ஆதரவு சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்துள்ளன.

ஓடிடியை ஆக்கிரமிக்கும் வெப் தொடர்கள்
இந்த தளங்களில் நமக்கு பிடித்தமான நடிகர்களின் தற்போதைய படங்களை மட்டுமின்றி பழைய படங்களையும் பார்க்கலாம் என்பதும் இந்த தளங்களுக்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுவதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. மேலும் இந்த ஓடிடி தளங்களில் திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்களும் வரவேற்பு பெற்று வருகின்றன.

அதிகமான வெப் தொடர்கள்
ஹாலிவுட்டில் அதிகமாக வெப் தொடர்கள் வெளியான நிலையில், தற்போது இந்தியாவிலும் இதற்கான மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போதைய ட்ரெண்டிங்கை நன்கு உணர்ந்துள்ள ஓடிடி தளங்கள் பல வெப் தொடர்களை களமிறக்கியுள்ளன. அந்த வகையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளமும் பல வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது.

புதிய வெப் தொடர்கள்
மேலும் புதிய வெப் தொடர்களையும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தியது. இதில் பல தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பிரபல இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி தயாரிப்பில் பிரம்மா மற்றும் அரவிந்த் ஆகியோர் இயக்கத்தில் சுழல் என்ற புதிய தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.

30 மொழிகளில் சுழல் வெப் தொடர்
இந்தத் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே தற்போது இந்தத் தொடர் வரும் 17ம் தேதி முதல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொடர் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 30 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

240 நாடுகளில் சுழல் வெப் தொடர்
மேலும் 240 நாடுகளில் இந்தத் தொடர் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படங்களில் மட்டுமில்லாமல் இத்தகைய வெப் தொடர்களிலும் நடிக்க தற்போது நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

புஷ்கர் -காயத்ரி கதை
இந்த வெப் தொடருக்கு புஷ்கர் -காயத்ரியே கதை எழுதியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாவதும் இந்த தொடருக்கான கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.