அஜய் தேவ்கன் ஆக்ஷன்.. ராஷி கன்னா ஹாட்னஸ்.. ஹாட்ஸ்டாரில் அசத்தப் போகும் ருத்ரா வெப்சீரிஸ்!
சென்னை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முதன் முறையாக நடித்துள்ள வெப் தொடரான ருத்ரா வெப்சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வெப்சீரிஸில் நாயகியாக நடிகை ராஷி கன்னா ஹாட்னஸிலும் ஆக்ஷனிலும் கலக்கி உள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப் தொடர் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

நம்பர் ஒன்
இந்தியாவில் உள்ள ஒடிடி தளங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 4.6 கோடி பேர் அதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதற்கு காரணம் இந்தியளவில் பெரிய நடிகர்களின் வெப் தொடர்கள், படங்கள் என தொடர்ந்து ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்வித்து வருவது தான் காரணம்.

தமிழ் மொழியில்
இந்தி வெப் தொடர் என்றாலும் ஆங்கில வெப் தொடர் என்றாலும் அதனை உடனடியாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு வருவதால், வெளியான உடனே ஏகப்பட்ட மக்கள் அதனை கண்டு ரசித்து விடுகின்றனர். அஜய் தேவ்கன், ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள இந்த ருத்ரா வெப் தொடரும் தமிழ் டிரைலருடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் முதன்முறையாக
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முதன் முறையாக ஒடிடி பக்கம் திரும்பி உள்ளார். நவாசுதின் சித்திக், அபிஷேக் பச்சன், சைஃப் அலி கான், மாதவன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டின் சிங்கமான அஜய் தேவ்கன் ருத்ரா எனும் வெப் தொடரில் நடித்துள்ளதால் ஒட்டுமொத்த அஜய் தேவ்கன் ரசிகர்களும் அந்த வெப் தொடரை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ராஷி கன்னா ராக்கிங்
சமந்தா, தமன்னா, ராதிகா ஆப்தே, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகைகள் வெப் தொடரில் நடித்து வரும் நிலையில், நடிகை ராஷி கன்னாவும் ருத்ரா வெப் தொடர் மூலம் ஒடிடி பக்கம் வந்துள்ளார். பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே படத்தில் அறிமுகமான ராஷி கன்னா ருத்ரா வெப் தொடரில் ஹாட்னஸிலும் ஆக்ஷனிலும் அதிரடி காட்டி உள்ளார். ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி வரும் வெப் தொடரிலும் ராஷி கன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர்கள்
இயக்குநர் ராஜேஷ் மபுஸ்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில் அஜய் தேவ்கன், ராஷி கன்னா, இஷா தியோல், ஆசிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இருட்டுக்கே பயம் காட்டுவான் இந்த ருத்ரா என தமிழில் அட்டகாசமான டிரைலரும் தற்போது வெளியாகி உள்ளது.

ரீமேக் வெப்சீரிஸ்
ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா நடிப்பில் இங்கிலாந்தில் வெளியான லூதர் எனும் டிவி தொடரின் ரீமேக் தான் இந்த ருத்ரா வெப் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லன் போர்ஷன் எல்லாம் சும்மா வலிமை படம் ஸ்டைலில் மிரட்டல் ரகமாக உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. வரும் பிப்ரவரி மாதம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப்தொடர் ரசிகர்களின் பார்வைகளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











