ஓடிடியில் வெளியாகும் முன்னே லீக்கான துணிவு HD பிரின்ட்.. நெட்பிளிக்ஸில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதன் HD பிரின்ட் இணையத்தில் லீக் ஆகி விட்டது. மேலும், துணிவு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி உடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நட்புக்காக நடித்த அஜித் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான கோர்ட் டிராமா படமான நேர்கொண்ட பார்வை படத்தில் வயதான வழக்கறிஞராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அஜித்.

நோ மீன்ஸ் நோ
பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகவே இருந்தாலும் அவர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை தொடக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி நோ மீன்ஸ் நோ என்கிற பஞ்ச் லைன் உடன் பாலிவுட்டில் உருவான பிங்க் படத்தை தமிழில் இயக்குநர் எச். வினோத் ரீமேக் செய்து இயக்க நடிகர் அஜித் அந்த படத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

வலிமையில் மீண்டும்
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்து உருவாக்கிய வலிமை திரைப்படம் இளைஞர்களை மோசடி கும்பல் எப்படி செயின் பறிப்பு குற்றவாளிகளாக மாற்றுகிறது என்பதை பைக் ரேஸ் பின்னணியில் நடக்கும் குற்றங்களை வைத்து பாடமாக எடுத்துக் காட்டியிருந்தனர்.

வங்கியில் நடக்கும் ஊழல்
மூன்றாவது முறையாக இணைந்த அதே கூட்டணி இந்த முறை வெயிட்டான மெசேஜ் உடன் அதிரடி ஆக்ஷன் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. நடிகர் அஜித்தின் வில்லத்தனமான மாஸ் லுக்கை பார்த்தே ரசிகர்கள் வாயடைத்துப் போன நிலையில், வங்கிகளில் கஸ்டமர்களுக்கே தெரியாமல் அவர்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு ஒரு ரூபாயாக உருவுவதாக இயக்குநர் வினோத் துணிவுடன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

துணிவு HD லீக்
கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதன் HD பிரின்ட் தமிழ்ராக்கர்ஸ், டெலிகிராம் என பைரஸியாக வெளியாகி டவுன்லோடுகள் தீயாக போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். சமுத்திரகனி, ஜான் கொக்கன், பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில்
துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக அஜித் படத்துக்கு பெரிய தொகை கொடுத்து துணிவு படத்தை வாங்கியது மட்டுமின்றி அடுத்ததாக உருவாக உள்ள ஏகே62 படத்தின் உரிமையையும் நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது. மேலும், விஜய்யின் தளபதி 67 படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது.

ஓடிடி ரிலீஸ் எப்போ
துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதியே அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. அஜித் ரசிகர்கள் பலர் இதன் காரணமாக நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். துணிவு வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











