தியேட்டரில் மாஸ் காட்டிய ரெட் டிராகன்.. அஜித்தின் குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த மாதம் 10ந் தேதி தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை என்ற கவலையில் அஜித் ரசிகர்கள் இருந்த நிலையில், பொங்கல் பாண்டிகைக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஆனால், படத்தில் அஜித்திற்கு மாஸான காட்சிகளோ, வசனமோ இல்லாததால், படம் அஜித் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. இதனால், படம் தியேட்டரில் எடுபடாமல் போனது. இதனால், ரசிகர்கள் அனைவரும், குட் பேட் அக்லி படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

Good Bad Ugly OTT Ajith

குட் பேட் அக்லி: ரசிகர்களின் ஹைப்பை அதிகரிக்கும் வகையில் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் இருந்ததால், ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்து இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போல படம் வெளியாகி வசூலை அள்ளியது. இப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, சிம்ரன், பிரியா வாரியர், யோகி பாபு, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தாலும், இந்த படத்தில் இடம் பெற்ற இளையராஜாவின் பாடலான 'ஒத்த ரூபாய் தாரேன்' பாடலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் இணையத்தில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

Good Bad Ugly கதை: ரெட் டிராகன் என்ற பெரிய கேங்ஸ்டரான அஜித், தனது மனைவி, மகனுக்காக போலீஸில் சரண் அடைந்து ஒரு நல்ல அப்பாவாக மாறுகிறார். தன்னுடைய மகனின் 18வது பிறந்த நாளுக்காக சிறையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, எதிரிகள் அஜித் மகன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்து அவனை சிறையில் அடைக்கின்றனர். தனது மகனை காப்பாற்றுவதற்காக அஜித் மீண்டும் கேங்ஸ்டராக மாறுகிறார். குட் பேட் அக்லி படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். மேலும், இப்படம் தமிழகத்தில் மட்டும் இரண்டு வாரத்தில் ரூ.172 கோடி வசூலித்தது சாதனை படைத்தது. அதே போல உலக அளவில் தற்போது ரூ.250 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஓடிடி: இந்நிலையில், ஏப்ரல் 10ந் தேதி தியேட்டரில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படம் மே 8ந் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பினை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தியேட்டரில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் ஓடிடியில் எந்த மாதிரியான சாதனை படைக்கப்போகிறது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X