ஓடிடி ஸ்ட்ரீமிங்... NO.1 இடத்தில் துணிவு... அஜித் ரசிகர்களாக மாறிய நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள்

சென்னை: அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அஜித் - வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான துணிவு படத்தை ஓடிடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 ரியல் வின்னர் துணிவு

ரியல் வின்னர் துணிவு

நேர்கொண்ட பார்வை, வலிமைய தொடர்ந்து அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்தது. அஜித்துடன், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். பொங்கல் ஸ்பெஷலாக கடந்த மாதம் 11ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக விஜய்யின் வாரிசும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதே 11ம் தேதி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துணிவு திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு பொங்கல் ரேஸில் ரியல் வின்னராக மாஸ் காட்டியது.

 பாக்ஸ் ஆபிஸில் சம்பவம்

பாக்ஸ் ஆபிஸில் சம்பவம்

துணிவு திரைப்படம் வங்கிகளில் நடக்கும் பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது. பங்குச் சந்தை, மியூச்சல் ஃபண்ட், கிரடிட் கார்டு போன்றவைகளால் எளிய மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதே இதன் கதைக்களம். இன்னொரு பக்கம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் டார்க் டெவில் என்ற நெகட்டிவ் ஷேட் கொண்ட கேரக்டரில் நடித்து ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தார் அஜித். இதனால் பாக்ஸ் ஆபிஸில் கமர்சியல் ஹிட் அடித்த துணிவு, உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அஜித்தின் ரியலான சம்பவமாக இந்தப் படம் அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

 ஓடிடியில் வெளியான துணிவு

ஓடிடியில் வெளியான துணிவு

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆனது துணிவு. அதன்படி கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான துணிவு படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடமும் தாறுமாறான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே ஓடிடியில் வெளியானது துணிவு. இதனால் உற்சாகமான ஓடிடி சப்ஸ்கிரைபர்கள் துணிவு படத்தை கொண்டாடி வருகின்றனர்.

 இந்தியளவில் நம்பர் 1

இந்தியளவில் நம்பர் 1

திரையரங்குகளில் குடும்பத்துடன் துணிவு படத்தை பார்க்க தவறியவர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களும் நெட்பிளிக்ஸில் துணிவு படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் 8ம் தேதி முதலே ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது துணிவு. அதேபோல் உலக அளவிலான பட்டியலிலும் டாப் 10ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள் அஜித் ரசிகர்களாக மாறிவிட்டனரா என்றளவில் துணிவு படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் துணிவு படக்குழுவினரும் அஜித் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் துணிவு நம்பர் 1 இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X