அஜித்தின் விடாமுயற்சி.. ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?.. டிவியிலும் போடுறாங்களாம்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆறாம் தேதி ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறாத படம் வசூல் ரீதியாகவும் கொஞ்சம் அடி வாங்கவே செய்திருக்கிறது. இன்னமும் தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருந்தாலும் நாளுக்கு நாள் கூட்டம் குறையத்தான் செய்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே ஏகேவின் ரசிகர்களுக்கு குஷி தாங்கவில்லை. ஏனெனில் ஆக்‌ஷன், த்ரில்லர் ஜானரில் படம் எடுக்கும் இயக்குநர்களில் மகிழ் திருமேனி தற்காலத்தில் தனித்து விளங்குபவர். இதனால் கண்டிப்பாக அஜித்தை வைத்து மிகப்பெரிய சம்பவத்தை செய்வார் என்று நம்பினார்கள். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. பெயர் அறிவிக்கப்பட்டபோதே ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள் என்பதுதான் உண்மை.

Ajith Vidaamuyarchi OTT

விடாமுயற்சி: இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க அஜர்பைஜானில் ஷூட்டிங் செய்யப்பட்டது. படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் வைக்க வேண்டாம் என்று மகிழ் திருமேனி தான் கொடுத்த பேட்டிகளில் கூறியிருந்தார். இருப்பினும் கடந்த ஆறாம் தேதி ரிலீஸான படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அஜித்தின் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு பெரிய ஷாக் ட்ரீட்மெண்ட்டை கொடுத்திருந்தார்கள் ஹீரோவும், இயக்குநரும்.

திருப்திப்படுத்தவில்லை: ஆக்‌ஷன் படத்தை எதிர்பார்த்து சென்றிருந்த ரசிகர்களுக்கு அஜித்தும், மகிழ் திருமேனி ஒரு ஃபேமிலி படத்தை கொடுத்தார்கள். காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்கும் ஒரு கணவனின் விடாமுயற்சியை படம் முழுக்க காட்டியிருந்தார்கள். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ என்ற இமேஜுடைய அஜித்தை இவ்வளவு ஷட்டிலாக பார்த்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முதல் பாதி முழுக்க அடக்கி வாசித்துவிட்டு இரண்டாவது பாதியில் அஜித் திருப்பி அடிக்கும்போதுதான் ஏகே ரசிகர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியே வந்தது.

பொறுமை இல்லை: அதேசமயம் அவ்வளவு நேரம் அஜித் அடி வாங்குவதை தங்களால் பார்க்கவே முடியவில்லை என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வளவு பெரிய இமேஜ் உள்ள ஒரு ஹீரோ அவை அனைத்தையும் துறந்துவிட்டு இப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடித்ததை ஒருதரப்பினர் பாராட்டவும் தவறவில்லை. விமர்சன ரீதியாக அடி வாங்கிய படம் வசூல் ரீதியாகவும் டல் அடித்தது. இதுவரை 100 கோடி ரூபாயை தாண்டி படம் வசூல் செய்ததாக கூறப்பட்டாலும்; திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறையவே செய்திருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கியிருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்தின் இறுதியில் விடாமுயற்சி படத்தை அந்நிறுவனம் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியிருக்கும் சன் டிவி தமிழ் புத்தாண்டன்று சேனலில் ஒளிபரப்ப முடிவு செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X