அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு முதல் அஜித்தின் வலிமை வரை.. இன்றைய OTT ரிலீஸ்!
சென்னை: தியேட்டர்களை ராஜமெளலியின் RRR தெறிக்கவிட்டு வரும் நிலையில், டிக்கெட் கிடைக்காமல் வீட்டில் இருப்பவர்கள் இன்று இருந்த இடத்திலேயே ஓடிடியில் பார்க்க ஏகப்பட்ட புதிய ரிலீஸ்கள் உள்ளன.
Recommended Video
அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இன்று அமேசான் பிரைமில் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியாகிறது.
மேலும், அஜித் குமாரின் வலிமை திரைப்படமும் ஓடிடி ரசிகர்களுக்காக ஜி5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. இந்த இரு படங்கள் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஓடிடி ரசிகர்களை ஈர்க்க இன்று என்ன என்ன படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிரது. தனுஷின் ஷமிதாப், அஜித்தின் விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் படங்களில் நடித்த கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் படு போல்டான கதாபாத்திரத்தில் காமெடி கலந்து நடித்திருக்கிறார். நிச்சயம் ரசிகர்களை இந்த படம் கவரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அஜித்தின் வலிமை
கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 200 கோடி கிளப்பில் இணைந்துள்ள அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. தியேட்டரில் படம் பார்க்காதவர்கள் அஜித்தின் பைக் ஸ்டன்ட் சாகசங்களை குடும்பத்துடன் ஓடிடியில் கண்டு களிக்கலாம். வெளிநாடுகளில் டிவிடிக்கள் ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில், வலிமை படத்தின் ஹெச்.டி பிரிண்ட் பைரஸி வெப்சைட்டுகளில் ஏற்கனவே பரவியது குறிப்பிடத்தக்கது.

பீம்லா நாயக்
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெர்ஷனாக உருவான பீம்லா நாயக் தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என்பதால் மார்ச் 24ம் தேதி மாலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியானது. இன்றும் ஏகப்பட்ட பவன் கல்யாண் ரசிகர்கள் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்கர் நாமினேஷனில் கலக்கிய டூன்
ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் டென்னிஸ் வில்லென்யூ இயக்கத்தில் வெளியான டூன் திரைப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷனில் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. ஆஸ்கர் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











