அமேஸான் பிரைம்மில் ரிலீஸ் ஆகும் அக்ஷய்குமாரின் பெல் பாட்டம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: அக்ஷய்குமார் நடிப்பில் அண்மையில் தியேட்டரில் ரிலீஸ் ஆன பெல் பாட்டம் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அக்ஷய் குமார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

ஏராளமான விருதுகள் குவிப்பு

ஏராளமான விருதுகள் குவிப்பு

இதுவரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார். அவற்றில் 53 படங்கள் கமர்ஷியல் ஹிட் அடித்துள்ளது. தேசிய விருது, பத்ம விருது, பிலிம் ஃபேர் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

தமிழில் நடித்துள்ள அக்ஷய் குமார்

தமிழில் நடித்துள்ள அக்ஷய் குமார்

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் நடித்தார். இதில் பக்ஷி ராஜன் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்தி மட்டுமின்றி மராத்தி, பஞ்சாபி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அக்ஷய் குமார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து

தற்போது நடிகர் அக்ஷய் குமார் பிரித்திவிராஜ், சூர்யவன்ஷி, பச்சன் பாண்டே, அட்ராங்கி ரே, ராம் சேது, ரக்க்ஷா பந்தன், சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் பெல் பாட்டம். பெல் பாட்டம் படம் 1980-களில் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஸ்பை த்ரில்லர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெல் பாட்டம் ஸ்டார்ஸ்

பெல் பாட்டம் ஸ்டார்ஸ்

ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ரிலீஸ்

உலகம் முழுவதும் ரிலீஸ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டது.

இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேஸான் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்தப் படம் கடந்த மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வரும் 16ஆம் தேதி அமேஸான் பிரைம்

வரும் 16ஆம் தேதி அமேஸான் பிரைம்

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் பெல் பாட்டம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக நடிகர் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முதல் பெல் பாட்டம் திரைப்படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைம்மில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயரிய தியேட்டர்

உலகின் மிக உயரிய தியேட்டர்

பெல்பாட்டம் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டதோடு உலகின் மிக உயரிய லடாக்கில் உள்ள உலகின் மிக உயர்ந்த மொபைல் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதுதொடர்பாக டிவிட்டிய நடிகர் அக்ஷய் குமார், லடாக்கின் லேவில் உள்ள உலகின் மிக உயர்ந்த மொபைல் தியேட்டரில் பெல் பாட்டம் திரையிடப்பட்டது என் இதயத்தை பெருமையடையச் செய்கிறது. 11562 அடி உயரத்தில், 28 டிகிரி வெப்பநிலையில் தியேட்டர் செயல்பட முடியும். என்ன ஒரு அற்புதமான சாதனை.. என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X