Alia Bhatt: அடியாத்தி.. வொண்டர் உமனுக்கே வில்லியான ஆலியா பட்.. தெறிக்கும் Heart of Stone ட்ரெய்லர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் நடிகை ஆலியா பட்.

ஹாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா வில்லியாக டுவைன் ஜான்சனின் பேவாட்ச் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரைப் போலவே தற்போது நடிகை ஆலியா பட்டும் வில்லியாக வொண்டர் உமனாக நடித்து அசத்திய நடிகை கால் கடோட்டின் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்திய நடிகர்கள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், ஆலியா பட் இந்த படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்து இந்திய ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Alia Bhatt turns ruthless villian in her Hollywood debut movie Heart of Stone

டம்மியாக்கிய ராஜமெளலி: ஆர்ஆர்ஆர் படத்தில் வெயிட்டான ரோல் என ஆலியா பட்டை புக் செய்து விட்டு பின்னர், அவரது போர்ஷனை டம்மியாக்கி விட்டார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு தனது கதாபாத்திரம் இல்லை என்றும் எடுத்த காட்சிகளையும் எடிட்டிங்கில் தூக்கி விட்டார் என்பதால், ராஜமெளலி மீது ஆலியா பட் கோபமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற போது கூட ஆலியா பட் ஒரு வாழ்த்துக் கூட அந்த படக்குழுவினருக்கு தெரிவிக்கவில்லை என்றும் சர்ச்சை கிளம்பியது.

ஹாலிவுட்டில் வில்லி: இந்நிலையில், ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உலக ரசிகர்களை மிரட்டி உள்ளது. வொண்டர் உமனாக நடித்து டிசி ரசிகர்களை கிறக்கமடைய வைத்த கால் கடோட் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரே ஒரு சீனுக்கு தனுஷ் போல வந்து செல்லாமல், மெயின் வில்லியாக ஆலியா பட் நடித்து மாஸ் காட்டி உள்ளார்.

பைக் ரைடு, ஸ்கை ஜம்ப் என காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன. ஆலியா பட் அந்த ஹார்ட் ஆஃப் ஸ்டோனை திருடுவதில் இருந்து தான் டிரெய்லர் சூடு பிடிக்கிறது.

Alia Bhatt turns ruthless villian in her Hollywood debut movie Heart of Stone

கர்ப்பமாக இருந்த போது: இத்தனைக்கும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு சினிமா மீதான ஆர்வத்தால் ஆலியா பட் உயிரைக் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நேரடியாக இந்த படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X