தமிழ்லயும் அல்லு அர்ஜுனின் ஆஹா ஒடிடி ... சூப்பரப்பு!

சென்னை : டோலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமானது ஆஹா ஓடிடி தளம்.

தெலுங்கில் பல முன்னணி படங்களின் ஓடிடி உரிமையை பெற்று வெளியிட்டு வருகிறது இந்நிறுவனம்.

இந்நிலையில் தமிழிலும் தனது கிளையை துவங்க உள்ளது ஆகா ஓடிடி தளம்.

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன்

டோலிவுட்டில் சிறப்பான நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் வாரி குவித்து வருகிறது. நடிகராக மட்டுமின்றி அவர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆஹா ஓடிடி தளம்

ஆஹா ஓடிடி தளம்

மேலும் ஆஹா ஓடிடி தளத்தை டோலிவுட்டில் துவங்கி அதை சிறப்பான வகையில் நடத்திவருகிறார். தொடர்ந்து பல சிறப்பான படங்களை தனது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து அதன் மூலம் அவர் வருமானத்தை பெற்று வருகிறார். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களை அவர் தனது ஓடிடி தளமான ஆஹாவில் வெளியிட்டு வருகிறார்.

தமிழில் ஆஹா ஓடிடி

தமிழில் ஆஹா ஓடிடி

இந்நிலையில் தமிழிலும் அவர் தனது ஆஹா ஓடிடி தளத்தின் கிளையை துவக்க உள்ளார். வரும் 28ஆம் தேதி இதன் துவக்க விழா நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 வரவேற்பைப் பெற்றுள்ள ஓடிடி தளங்கள்

வரவேற்பைப் பெற்றுள்ள ஓடிடி தளங்கள்

இந்த கொரானா காலத்தில் ஓடிடி தளங்கள் மிகவும் கவனம் பெற்று வருகின்றது. திரையரங்குகளில் சென்று படங்களை பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடி தளங்களை நம்பியே உள்ளனர். பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள்

ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள்

தமிழிலும் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஜீ 5, சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்று வருகின்றன. இந்த தளங்களில் முக்கியமான நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. வீட்டிலேயே முடங்கியுள்ள ரசிகர்களை இந்த படங்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

தமிழுக்கு புதிய வரவு

தமிழுக்கு புதிய வரவு

இந்நிலையில் தமிழுக்கு புதிய வரவாக ஆஹா ஓடிடி தளமும் தற்போது வர உள்ளது. இந்த தளத்தில் முதல்படமே ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான ரைட்டர் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் சமுத்திரகனி லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் தற்போது இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நிகழ்ச்சிகளுக்கும் திட்டம்.

நிகழ்ச்சிகளுக்கும் திட்டம்.

படங்கள் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஆஹா ஓடிடி தளம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ரைட்டர் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை இன்னும் அந்த தளம் வெளியிடவில்லை. விரைவில் இதன் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடுகள்

சிறப்பான செயல்பாடுகள்

இதனிடையே மலையாளப் படமான விக்ருதியின் தமிழ் ரீமேக்கான பயணிகள் கவனிக்கவும் என்ற படத்தின் டிஜிட்டல் உரிமையையும் ஆஹா ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் உள்ளிட்ட தளங்கள் போன்று விரைவில் ஆஹா ஓடிடி தளமும் தனது சிறப்பான செயல்பாடுகளை தமிழகத்தில் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X