Pushpa 2 - போடு வெடிய ஓடிடியில் ரிலீஸானது புஷ்பா 2.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் புஷ்பா 2. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2 மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகளவில் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதனால் அல்லுவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க புஷ்பா 2 படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.
தெலுங்கு திரையுலகத்தை இந்திய அளவில் அடையாளபடுத்திய படங்களில் ஒன்று புஷ்பா. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும் 1000 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. குறிப்பாக அல்லு அர்ஜுனை இந்திய அளவில் அடையாளப்படுத்தி அவருக்கு பான் இந்தியா ஹீரோ என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

புஷ்பா 2: புஷ்பா படத்தின் முதல் பாகத்துடைய மெகா ஹிட்டைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தைவிடவும் இரண்டாவது பாகத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஷூட்டிங்கோ ரொம்பவே ஸ்லோவாக நடந்தது. அல்லு அர்ஜுனுக்கும், சுகுமாருக்கும் இடையே பிரச்னை அதன் காரணமாக இந்தப் படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள் என்று ஒரு தகவல் முதலில் பரவியது. அதனைத் தொடர்ந்து படத்தை முழுவதுமாகவே ரீ ஷூட் செய்தார்கள் என்றும் ஒரு பேச்சு ஓடியது.
ரிலீஸான படம்: ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று டோலிவுட் வட்டாரம் தெரிவித்தது. ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து கடந்த வருடம் படம் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர். சுகுமாரின் மேக்கிங்கும், அல்லு அர்ஜுனின் நடிப்பும் அப்ளாஸை அள்ளின. அதேசமயம் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மட்டும் கொஞ்சம் பின்னடைவை சந்தித்ததாகவும்; பாடலில் ஓவர் கிளாமர் என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
மெகா வசூல்: விமர்சன ரீதியாக படம் பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. ஆனால் ஒரு தரப்பினர் படத்தை விமர்சித்தனர். மேலும் ஒரு குற்றவாளி கேரக்டரை ஹீரோவாக்கி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் குரல்கள் எழுந்தன. அதிலும் படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது ஏற்பட்ட உயிரிழப்பு இந்தப் படத்தை சுற்றி பரபரப்பை மேலும் பற்றவைத்தது. அந்த விஷயத்தில் அவர் கைதும் செய்யப்பட்டார். இப்படி ஏகப்பட்ட பாசிட்டிவ், நெகட்டிவ்களை தாண்டி உலகளவில் இந்தப் படம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.
ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டரில் சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்ற புஷ்பா 2 எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்தவகையில் இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். கன்னட மொழியில் விரைவில் ஸ்ட்ரீமாகவிருக்கிறது. மேலும் கூடுதலாக 23 நிமிட காட்சிகளும் இந்த ஓடிடி ரிலீஸில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போலவே ஓடிடியில் செமயாக கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











